Numbers 1:3 in Tamil
இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக.
Isravaelilae irubathu vayathullavarkal muthal yuththaththukkup purappadaththakkavarkal ellaaraiyum avarkal saenaigalinpadi neeyum aaronum ennip paarppeerkalaaga.
Numbers 1:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் அவர்களுடைய சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பாருங்கள்.
- Open Tamil Contemporary Version
- நீயும், ஆரோனும் படையில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லா இஸ்ரயேல் மனிதர்களையும், அவர்களுடைய பிரிவுகளின்படி கணக்கிடுங்கள்.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேல் ஜனங்களில் இருபது வயது அல்லது அதற்கு மேலுள்ள எல்லா ஆண்களையும் நீயும் ஆரோனும் எண்ணிக் கணக்கிடுங்கள். (இந்த ஆண்கள்தான் இஸ்ரவேல் படையில் பணிபுரிய வேண்டும்.) இவர்களை குழுவின்படி கணக்கிடுக.
Numbers 1:3 in English
- King James Version (KJV)
- From twenty years old and upward, all that are able to go forth to war in Israel: thou and Aaron shall number them by their armies.
- World English Bible (WEB)
- from twenty years old and upward, all who are able to go out to war in Israel. You and Aaron shall count them by their divisions.
- American Standard Version (ASV)
- from twenty years old and upward, all that are able to go forth to war in Israel, thou and Aaron shall number them by their hosts.
- Bible in Basic English (BBE)
- All those of twenty years old and over, who are able to go to war in Israel, are to be numbered by you and Aaron.
- Darby Translation (DBY)
- from twenty years and upward, all that go forth to military service in Israel: ye shall number them according to their hosts, thou and Aaron.
- Webster's Bible (WBS)
- From twenty years old and upward, all that are able to go forth to war in Israel; thou and Aaron shall number them by their armies.
- Young's Literal Translation (YLT)
- from a son of twenty years and upward, every one going out to the host in Israel, ye do number them by their hosts, thou and Aaron;
Read in context
- 1இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:
- 2நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச் சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர் களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள்.
- 3இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக.
- 4ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்க வேண்டும்.
- 5உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.
Cross references
- Exodus 30:14 யாத்திராகமம் 30:14எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும்.
- Numbers 14:29 எண்ணாகமம் 14:29இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.
- Numbers 26:2 எண்ணாகமம் 26:2இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார்.
- Deuteronomy 24:5 உபாகமம் 24:5ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய்விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில் தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக.
- 2 Chronicles 26:11–13 2 நாளாகமம் 26:11–13உசியாவுக்கு யுத்தவீரரின் சேனையும் இருந்தது; அது சம்பிரதியாகிய ஏயெலினாலும் ஆதிக்கக்காரனாகிய மாசேயாவினாலும் இலக்கம்பார்க்கப்பட்டபடியே, ராஜாவின் பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் வகுப்பு வகுப்பாய்ச் சேவகம்பண்ணப் புறப்பட்டது. பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு. இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணை நிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது.
- Deuteronomy 3:18 உபாகமம் 3:18அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்த தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுத்தார்; யுத்தஞ்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரருக்கு முன்னே ஆயுதபாணிகளாக நடந்து போங்கள்.
- 2 Samuel 24:9 2 சாமுவேல் 24:9யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்ததொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்கயுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம்பேர் இருந்தார்கள்.
- Numbers 32:11 எண்ணாகமம் 32:11உத்தமமாய் என்னைப்பின்பற்றினகேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,
- Exodus 12:17 யாத்திராகமம் 12:17புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.
- Numbers 33:1 எண்ணாகமம் 33:1மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள்தங்கள் சேனைகளின்படியே எகிப்தி தேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருடையபிரயாணங்களின் விவரம்:
- 2 Chronicles 17:13–18 2 நாளாகமம் 17:13–18யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளை நடத்தினான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள். தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய இலக்கமாவது: யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் அத்னா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்றுலட்சம்பேர் இருந்தார்கள். அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதியிருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள். அவனுக்கு உதவியாகக் கர்த்தருக்குத் தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்த சிக்ரியின் குமாரனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள். பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள். அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே சேவகத்திற்கு ஆயுதபாணிகள் லட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.