Numbers 14:28 in Tamil
நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
Nee avarkalodae sollavaendiyathu ennavendraal: neengal en sevigal kaedkas sonnabiragaaram ungalukkus seyvaen enpathai en jeevanaikkondu sollugiraen endru karththar uraikkiraar.
Numbers 14:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ அவர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என்னுடைய காதுகள் கேட்கச் சொன்னபடியே உங்களுக்குச் செய்வேன் என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவா உரைக்கிறார்.
- Open Tamil Contemporary Version
- எனவே நீ அவர்களிடம், ‘நான் வாழ்வது நிச்சயம்போலவே, எனக்கு கேட்கும்படி நீங்கள் முறுமுறுத்த அதே காரியங்களை நான் உங்களுக்குச் செய்வேன் என்பது நிச்சயம்’ என அவர்களுக்குச் சொல் என்று யெகோவா அறிவிக்கிறார்.
- Tamil Easy Reading Version
- நீங்கள் முறையிட்டபடியே கர்த்தர் நிச்சயம் உங்களுக்குச் செய்வார் என்று அவர்களிடம் சொல். இதுதான் உங்களுக்கு நடை பெறப்போகிறது:
Numbers 14:28 in English
- King James Version (KJV)
- Say unto them, [ As truly as] I live, saith the LORD, as ye have spoken in mine ears, so will I do to you:
- World English Bible (WEB)
- Tell them, ‘As I live, says the LORD, surely as you have spoken in my ears, so I will do to you.
- American Standard Version (ASV)
- Say unto them, As I live, saith Jehovah, surely as ye have spoken in mine ears, so will I do to you:
- Bible in Basic English (BBE)
- Say to them, By my life, says the Lord, as certainly as your words have come to my ears, so certainly will I do this to you:
- Darby Translation (DBY)
- Say unto them, As surely as I live, saith Jehovah, if I do not do unto you as ye have spoken in mine ears!
- Webster's Bible (WBS)
- Say to them, [As truly as] I live, saith the LORD, as ye have spoken in my ears, so will I do to you:
- Young's Literal Translation (YLT)
- say unto them, I live — an affirmation of Jehovah — if, as ye have spoken in Mine ears — so I do not to you;
Read in context
- 26பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
- 27எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன்.
- 28நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
- 29இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.
- 30எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.
Cross references
- Numbers 14:21 எண்ணாகமம் 14:21பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
- Hebrews 3:17 எபிரெயர் 3:17மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே.
- Numbers 14:2 எண்ணாகமம் 14:2இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.
- Numbers 14:23 எண்ணாகமம் 14:23அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள்.
- Deuteronomy 1:35 உபாகமம் 1:35உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதரில் ஒருவரும் காண்பதில்லை என்றும்,
- Numbers 26:64–65 எண்ணாகமம் 26:64–65முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை. வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை.
- Numbers 32:11 எண்ணாகமம் 32:11உத்தமமாய் என்னைப்பின்பற்றினகேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,
- Psalm 90:8–9 சங்கீதம் 90:8–9எங்கள் அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டோம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.