Psalm 115:12 in Tamil
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
Karththar nammai ninaiththirukkiraar, avar aaseervathippaar; isravael kudumbaththaarai aaseervathippaar, avar aaron kudumbaththaarai aaseervathippaar.
Psalm 115:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவா நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்.
- Open Tamil Contemporary Version
- யெகோவா நம்மை நினைவில் வைத்திருக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்; அவர் இஸ்ரயேலின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்; அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
- Tamil Easy Reading Version
- கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார், கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பார். கர்த்தர் ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
Psalm 115:12 in English
- King James Version (KJV)
- The LORD hath been mindful of us: he will bless [us;] he will bless the house of Israel; he will bless the house of Aaron.
- World English Bible (WEB)
- The LORD remembers us. He will bless us. He will bless the house of Israel. He will bless the house of Aaron.
- American Standard Version (ASV)
- Jehovah hath been mindful of us; he will bless [us]: He will bless the house of Israel; He will bless the house of Aaron.
- Bible in Basic English (BBE)
- The Lord has kept us in mind and will give us his blessing; he will send blessings on the house of Israel and on the house of Aaron.
- Darby Translation (DBY)
- Jehovah hath been mindful of us: he will bless, he will bless the house of Israel; he will bless the house of Aaron;
- Webster's Bible (WBS)
- The LORD hath been mindful of us: he will bless [us] ; he will bless the house of Israel; he will bless the house of Aaron.
- Young's Literal Translation (YLT)
- Jehovah hath remembered us, He blesseth, He blesseth the house of Israel, He blesseth the house of Aaron,
Read in context
- 10ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
- 11கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
- 12கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
- 13கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்.
- 14கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.
Cross references
- Psalm 136:23 சங்கீதம் 136:23நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- Ephesians 1:3 எபேசியர் 1:3நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர் வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
- Isaiah 44:21 ஏசாயா 44:21யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
- Genesis 12:2–3 ஆதியாகமம் 12:2–3நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
- Isaiah 49:14–16 ஏசாயா 49:14–16சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள். ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனைமறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.
- Psalm 67:7 சங்கீதம் 67:7தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாட்டாகிய சங்கீதம்.)
- Psalm 25:7 சங்கீதம் 25:7என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
- Galatians 3:29 கலாத்தியர் 3:29நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.
- Exodus 2:24–25 யாத்திராகமம் 2:24–25தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.
- Genesis 2:17–18 ஆதியாகமம் 2:17–18ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
- Galatians 3:14 கலாத்தியர் 3:14ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும் படியாகவும் இப்படியாயிற்று.
- Acts 3:26 அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:26அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான். அதிகாரம்
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.