Psalm 17:14 in Tamil
மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால்நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.
Manusharudaiya kaikkum, immaiyil thangal pangaip petrirukkira ulagamakkalin kaikkum ummudaiya karaththinaal ennaith thappuviyum; avarkal vayitrai umathu thiraviyaththinaalnirappugireer; avarkal puththirabaakkiyaththinaal thirupthiyadainthu, thangalukku meethiyaana porulaith thangal kuzhanthaigalukku vaikkiraarkal.
Psalm 17:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவே, மனிதருடைய கைக்கும், இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்; அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள்.
- Open Tamil Contemporary Version
- யெகோவாவே, இப்படிப்பட்டவர்களிடமிருந்தும், இம்மையிலேயே தங்கள் வெகுமதியைப் பெறுகிற இவ்வுலக மனிதரிடமிருந்தும், உமது கரத்தினால் என்னைக் காப்பாற்றும்; நீர் கொடியவர்களுக்கென்று வைத்திருக்கிறவைகளால் அவர்களுடைய வயிற்றை நிரப்பும்; அவர்களுடைய பிள்ளைகள் நிறைவாய்ப் பெற்றுக்கொள்ளட்டும்; மீதியானதை அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லட்டும்.
- Tamil Easy Reading Version
- கர்த்தாவே, உயிருள்ளோர் வாழும் தேசத்திலிருந்து அத்தீயோரை உமது வல்லமையால் அப்புறப்படுத்தும். கர்த்தாவே, பலர் உம்மிடம் உதவிக்காக வருவார்கள். இவ்வாழ்க்கையில் அதிகம் பலனில்லை. அவர்களுக்கு அதிக உணவளியும். வேண்டுவனவற்றை அவர்கள் பிள்ளைகளுக்குக் கொடும். அவர்களின் பிள்ளைகளுக்கும் மிகுந்திருக்கும்படியாக அப்பிள்ளைகளுக்குத் திருப்தியாய் உணவளியும்.
Psalm 17:14 in English
- King James Version (KJV)
- From men [which are] thy hand, O LORD, from men of the world, [which have] their portion in [this] life, and whose belly thou fillest with thy hid [treasure:] they are full of children, and leave the rest of their [substance] to their babes.
- World English Bible (WEB)
- from men by your hand, LORD, from men of the world, whose portion is in this life. You fill the belly of your cherished ones. Your sons have plenty, and they store up wealth for their children.
- American Standard Version (ASV)
- From men by thy hand, O Jehovah, From men of the world, whose portion is in [this] life, And whose belly thou fillest with thy treasure: They are satisfied with children, And leave the rest of their substance to their babes.
- Bible in Basic English (BBE)
- With your hand, O Lord, from men, even men of the world, whose heritage is in this life, and whom you make full with your secret wealth: they are full of children; after their death their offspring take the rest of their goods.
- Darby Translation (DBY)
- From men [who are] thy hand, O Jehovah, from men of this age: their portion is in [this] life, and their belly thou fillest with thy hid [treasure]; they have their fill of sons, and leave the rest of their [substance] to their children.
- Webster's Bible (WBS)
- From men [who are] thy hand, O LORD, from men of the world, [who have] their portion in [this] life, and whose belly thou fillest with thy hid [treasure] : they are full of children, and leave the rest of their [substance] to their babes.
- Young's Literal Translation (YLT)
- From men, Thy hand, O Jehovah, From men of the world, their portion [is] in life, And [with] Thy hidden things Thou fillest their belly, They are satisfied [with] sons; And have left their abundance to their sucklings.
Read in context
- 12பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.
- 13கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும்.
- 14மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால்நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.
- 15நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். கர்த்தருடைய தாசனாகிய தாவீது இந்தப்பாட்டின் வார்த்தைகளைக் கர்த்தர் தன்னைத் தன்னுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்த நாளிலே பாடினது.)
Cross references
- Job 22:18 யோபு 22:18ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
- John 17:14 யோவான் 17:14நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
- John 15:19 யோவான் 15:19நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
- Luke 16:8 லூக்கா 16:8அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.
- John 8:23 யோவான் 8:23அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல.
- Luke 16:25 லூக்கா 16:25அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
- Psalm 49:17–19 சங்கீதம் 49:17–19அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும், அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான்.
- Luke 12:19–21 லூக்கா 12:19–21பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.
- 1 John 4:4–5 1 யோவான் 4:4–5பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப்பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.
- James 5:5 யாக்கோபு 5:5பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள்.
- Job 21:7–15 யோபு 21:7–15துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்? அவர்களோடுங்கூட அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள். அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும்; தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை. அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது. அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள். அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள். அவர்கள் செல்வவான்களாய்த்தங்கள் நாட்களைப் போக்கி, ஒருசஷணப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்; சர்வவல்லவரை நாம் சேவிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம் பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள்.
- Job 21:21 யோபு 21:21அவன் மாதங்களின் தொகைகுறுக்கப்படும்போது, அவனுக்குப் பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?
Original words (Hebrew)
- men · H4962מַת math
- hand · H3027יָד yâd
- men · H4962מַת math
- world · H2465חֶלֶד cheled
- portion · H2506חֵלֶק chêleq
- life · H2416חַי chay
- belly · H990בֶּטֶן beṭen
- fillest · H4390מָלֵא mâlêʼ
- hid · H6840צָפִין tsâphîyn
- full · H7646שָׂבַע sâbaʻ
- children · H1121בֵּן bên
- leave · H3240יָנַח yânach
- rest · H3499יֶתֶר yether
- babes · H5768עוֹלֵל ʻôwlêl
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.