Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 46 in Tamil

Present
  1. 1

    தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.

    To the chief Musician for the sons of Korah, A Song upon Alamoth. God [is] our refuge and strength, a very present help in trouble.

  2. 2

    ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும்,

    Therefore will not we fear, though the earth be removed, and though the mountains be carried into the midst of the sea;

  3. 3

    அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)

    [Though] the waters thereof roar [and] be troubled, [though] the mountains shake with the swelling thereof. Selah.

  4. 4

    ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.

    [There is] a river, the streams whereof shall make glad the city of God, the holy [place] of the tabernacles of the most High.

  5. 5

    தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.

    God [is] in the midst of her; she shall not be moved: God shall help her, [and that] right early.

  6. 6

    ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று.

    The heathen raged, the kingdoms were moved: he uttered his voice, the earth melted.

  7. 7

    சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

    The LORD of hosts [is] with us; the God of Jacob [is] our refuge. Selah.

  8. 8

    பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள்.

    Come, behold the works of the LORD, what desolations he hath made in the earth.

  9. 9

    அவர் பூமியின் கடைமுனைமட்டும்யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.

    He maketh wars to cease unto the end of the earth; he breaketh the bow, and cutteth the spear in sunder; he burneth the chariot in the fire.

  10. 10

    நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.

    Be still, and know that I [am] God: I will be exalted among the heathen, I will be exalted in the earth.

  11. 11

    சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.) (கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.)

    The LORD of hosts [is] with us; the God of Jacob [is] our refuge. Selah.

All chapters of Psalms · Tamil Bible

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.