Psalm 56:1 in Tamil
தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.
Thaevanae, enakku irangum; manushan ennai vizhungappaarkkiraan, naalthorum porseythu, ennai odukkugiraan.
Psalm 56:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.
- Open Tamil Contemporary Version
- பெலிஸ்தியர் தாவீதை காத் ஊரில் பிடித்தபோது, “தொலைவில் உள்ள கருவாலி மரத்தில் வாழும் மெளன மாடப்புறா” என்ற இசையில் தாவீது பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம். இறைவனே, என்மேல் இரக்கமாயிரும், மனிதன் என்னை தாக்குகிறான்; நாள்தோறும் போர்செய்து என்னை அடக்குகிறான்.
- Tamil Easy Reading Version
- தேவனே, ஜனங்கள் என்னைத் தாக்குகிறார்கள், நீர் என்மேல் இரக்கமாயிரும். அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து வந்து பகலும் இரவும் என்னோடு போரிடுகிறார்கள்.
Psalm 56:1 in English
- King James Version (KJV)
- To the chief Musician upon Jonath-elem-rechokim, Michtam of David, when the Philistines took him in Gath. Be merciful unto me, O God: for man would swallow me up; he fighting daily oppresseth me.
- World English Bible (WEB)
- For the Chief Musician. To the tune of “Silent Dove in Distant Lands.” A poem by David, when the Philistines seized him in Gath. Be merciful to me, God, for man wants to swallow me up. All day long, he attacks and oppresses me.
- American Standard Version (ASV)
- For the Chief Musician; set to Jonath elem rehokim. [A Psalm] of David. Michtam; when the Philistines took him in Gath. Be merciful unto me, O God; for man would swallow me up: All the day long he fighting oppresseth me.
- Bible in Basic English (BBE)
- To the chief music-maker; put to Jonath elem rehokim. Of David. Michtam. When the Philistines took him in Gath. Have mercy on me, O God, for man is attempting my destruction; every day he makes cruel attacks against me.
- Darby Translation (DBY)
- To the chief Musician. On Jonathelem-rechokim. Of David. Michtam; when the Philistines took him in Gath. Be gracious unto me, O God; for man would swallow me up: all the day long fighting he oppresseth me.
- Webster's Bible (WBS)
- To the chief Musician upon Jonathelem-rechokim, Michtam of David, when the Philistines took him in Gath. Be merciful to me, O God: for man would swallow me up; he fighting daily oppresseth me.
- Young's Literal Translation (YLT)
- To the Overseer. — 'On the Dumb Dove far off.' — A secret treasure of David, in the Philistines' taking hold of him in Gath. Favour me, O God, for man swallowed me up, All the day fighting he oppresseth me,
Read in context
- 1தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.
- 2என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர் செய்கிறவர்கள் அநேகர்.
- 3நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
Cross references
- 1 Samuel 29:4 1 சாமுவேல் 29:4அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும் படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடே கூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா?
- Psalm 31:9 சங்கீதம் 31:9எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று.
- Psalm 16:1 சங்கீதம் 16:1தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
- Psalm 69:13–16 சங்கீதம் 69:13–16ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும். நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கி விடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும்நான் நீங்கும்படி செய்யும். ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக. கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.
- Psalm 59:1 சங்கீதம் 59:1என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
- 1 Corinthians 15:54 1 கொரிந்தியர் 15:54அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
- 1 Samuel 21:11–15 1 சாமுவேல் 21:11–15ஆகீசின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக்குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள். இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு, அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக்காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரரை நோக்கி: இதோ, இந்த மனுஷன் பித்தங்கொணடவன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டுவந்தது என்ன? எனக்கு முன்பாகப் பயித்தியசேஷ்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டுவருகிறதற்கு, பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்.
- Psalm 27:2 சங்கீதம் 27:2என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.
- Psalm 143:12 சங்கீதம் 143:12உம்முடைய கிருபையின்படி என் சத்துருக்களை அழித்து, என் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணும்; நான் உமது அடியேன். (தாவீதின் சங்கீதம்.)
- Psalm 60:1 சங்கீதம் 60:1தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.
- Psalm 136:15 சங்கீதம் 136:15பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- Hosea 8:8 ஓசியா 8:8இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.