Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 67 in Tamil

Present
  1. 1

    தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,

    To the chief Musician on Neginoth, A Psalm [or] Song. God be merciful unto us, and bless us; [and] cause his face to shine upon us; Selah.

  2. 2

    தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா.)

    That thy way may be known upon earth, thy saving health among all nations.

  3. 3

    தேவனே, ஜனங்கள்உம்மைத்துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.

    Let the people praise thee, O God; let all the people praise thee.

  4. 4

    தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே (சேலா.) மகிழக்கடவர்கள்.

    O let the nations be glad and sing for joy: for thou shalt judge the people righteously, and govern the nations upon earth. Selah.

  5. 5

    தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.

    Let the people praise thee, O God; let all the people praise thee.

  6. 6

    பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.

    [Then] shall the earth yield her increase; [and] God, [even] our own God, shall bless us.

  7. 7

    தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாட்டாகிய சங்கீதம்.)

    God shall bless us; and all the ends of the earth shall fear him.

All chapters of Psalms · Tamil Bible

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.