Psalm 66 in Tamil
சங்கீதம் 66
- 1
பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
To the chief Musician, A Song [or] Psalm. Make a joyful noise unto God, all ye lands:
- 2
அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.
Sing forth the honour of his name: make his praise glorious.
- 3
தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.
Say unto God, How terrible [art thou in] thy works! through the greatness of thy power shall thine enemies submit themselves unto thee.
- 4
பூமியின்மீதெங்கும்உம்மைப்பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா.)
All the earth shall worship thee, and shall sing unto thee; they shall sing [to] thy name. Selah.
- 5
தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுபுத்திரரிடத்தில்நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.
Come and see the works of God: [he is] terrible [in his] doing toward the children of men.
- 6
கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.
He turned the sea into dry [land:] they went through the flood on foot: there did we rejoice in him.
- 7
அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா.)
He ruleth by his power for ever; his eyes behold the nations: let not the rebellious exalt themselves. Selah.
- 8
ஜனங்களே, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள்.
O bless our God, ye people, and make the voice of his praise to be heard:
- 9
அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.
Which holdeth our soul in life, and suffereth not our feet to be moved.
- 10
தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
For thou, O God, hast proved us: thou hast tried us, as silver is tried.
- 11
எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.
Thou broughtest us into the net; thou laidst affliction upon our loins.
- 12
மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
Thou hast caused men to ride over our heads; we went through fire and through water: but thou broughtest us out into a wealthy [place].
- 13
சர்வாங்கதகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள்பிரவேசிப்பேன்;
I will go into thy house with burnt offerings: I will pay thee my vows,
- 14
என்இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
Which my lips have uttered, and my mouth hath spoken, when I was in trouble.
- 15
ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா.)
I will offer unto thee burnt sacrifices of fatlings, with the incense of rams; I will offer bullocks with goats. Selah.
- 16
தேவனுக்குப்பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
Come [and] hear, all ye that fear God, and I will declare what he hath done for my soul.
- 17
அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார்.
I cried unto him with my mouth, and he was extolled with my tongue.
- 18
என்இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
If I regard iniquity in my heart, the Lord will not hear [me:]
- 19
மெய்யாய்தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
[But] verily God hath heard [me;] he hath attended to the voice of my prayer.
- 20
என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. (நெகினோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதப்பாட்டு.)
Blessed [be] God, which hath not turned away my prayer, nor his mercy from me.