Psalm 7:5 in Tamil
பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன். (சேலா.)
Pagainjan en aaththumaavaith thodarnthubidiththu, en piraananaith tharaiyilae thalli mithiththu, en magimaiyaith thoolilae thaazhththakkadavan. (saelaa.)
Psalm 7:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து, என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா)
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது என் எதிரி என்னைப் பின்தொடர்ந்து என்னைப் பிடிக்கட்டும்; அவன் என்னைத் தரையில் தள்ளி, உயிர்போக மிதித்து தூசியிலே என்னைக் கிடக்கப்பண்ணட்டும்.
- Tamil Easy Reading Version
- ஆனால் ஒரு பகைவன் என்னைத் துரத்துகிறான். அவன் என்னைக் கொல்ல ஆவலாயிருக்கிறான். அவன் என் ஜீவனைத் தரையில் வீழ்த்தி நசுக்க விரும்பி அழுக்குக்குள் என் ஆத்துமாவை அழுத்துகிறான்.
Psalm 7:5 in English
- King James Version (KJV)
- Let the enemy persecute my soul, and take [it;] yea, let him tread down my life upon the earth, and lay mine honour in the dust. Selah.
- World English Bible (WEB)
- let the enemy pursue my soul, and overtake it; yes, let him tread my life down to the earth, and lay my glory in the dust. Selah.
- American Standard Version (ASV)
- Let the enemy pursue my soul, and overtake it; Yea, let him tread my life down to the earth, And lay my glory in the dust. [Selah
- Bible in Basic English (BBE)
- Let my hater go after my soul and take it; let my life be crushed to the earth, and my honour into the dust. (Selah.)
- Darby Translation (DBY)
- Let the enemy pursue after my soul, and take [it], and let him tread down my life to the earth, and lay my glory in the dust. Selah.
- Webster's Bible (WBS)
- Let the enemy persecute my soul, and take [it] ; yes, let him tread down my life upon the earth, and lay my honor in the dust. Selah.
- Young's Literal Translation (YLT)
- An enemy pursueth my soul, and overtaketh, And treadeth down to the earth my life, And my honour placeth in the dust. Selah.
Read in context
- 3என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும்,
- 4என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,
- 5பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன். (சேலா.)
- 6கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
- 7ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.
Cross references
- Malachi 4:3 மல்கியா 4:3துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ்சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
- Jeremiah 17:13 எரேமியா 17:13இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.
- Psalm 44:5 சங்கீதம் 44:5உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.
- Psalm 3:2 சங்கீதம் 3:2தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.)
- Psalm 49:12 சங்கீதம் 49:12ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.
- Psalm 60:12 சங்கீதம் 60:12தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார். (நெகினோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
- Zechariah 10:5 சகரியா 10:5அவர்கள் யுத்தத்திலே தங்கள் சத்துருக்களை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து யுத்தம்பண்ணுவார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள்.
- Isaiah 10:6 ஏசாயா 10:6அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.
- Job 16:15 யோபு 16:15நான் இரட்டுச் சேலையைத்தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.
- Job 31:38–40 யோபு 31:38–40எனக்கு விரோதமாக என் காணி பூமி கூப்பிடுகிறதும், அதின் படைச்சால்கள்கூட அழுகிறதும், கூலிகொடாமல் நான் அதின் பலனைப் புசித்து, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால், அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.
- Habakkuk 3:13 ஆபகூக் 3:13உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா.
- Isaiah 63:3 ஏசாயா 63:3நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.