Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 82 in Tamil

Present
  1. 1

    தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

    A Psalm of Asaph. God standeth in the congregation of the mighty; he judgeth among the gods.

  2. 2

    எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)

    How long will ye judge unjustly, and accept the persons of the wicked? Selah.

  3. 3

    ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

    Defend the poor and fatherless: do justice to the afflicted and needy.

  4. 4

    பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

    Deliver the poor and needy: rid [them] out of the hand of the wicked.

  5. 5

    அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

    They know not, neither will they understand; they walk on in darkness: all the foundations of the earth are out of course.

  6. 6

    நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

    I have said, Ye [are] gods; and all of you [are] children of the most High.

  7. 7

    ஆனாலும் நீங்கள் மனுஷரைப் போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.

    But ye shall die like men, and fall like one of the princes.

  8. 8

    தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர். (ஆசாபின் சங்கீதமாகிய பாட்டு.)

    Arise, O God, judge the earth: for thou shalt inherit all nations.

All chapters of Psalms · Tamil Bible

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.