Psalm 98:1 in Tamil
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.
Karththarukkup puthuppaattaip paadungal; avar athisayangalais seythirukkiraar; avarudaiya valathu karamum, avarudaiya parisuththa puyamum, ratchippai undaakkinathu.
Psalm 98:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பாடல். யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது.
- Open Tamil Contemporary Version
- சங்கீதம். யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஏனெனில் அவர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமுமே இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறது.
- Tamil Easy Reading Version
- புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால் கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள். அவரது பரிசுத்த வலது கை மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும்.
Psalm 98:1 in English
- King James Version (KJV)
- A Psalm. O sing unto the LORD a new song; for he hath done marvellous things: his right hand, and his holy arm, hath gotten him the victory.
- World English Bible (WEB)
- A Psalm. Sing to the LORD a new song, for he has done marvelous things! His right hand and his holy arm have worked salvation for him.
- American Standard Version (ASV)
- A Psalm. Oh sing unto Jehovah a new song; For he hath done marvellous things: His right hand, and his holy arm, hath wrought salvation for him.
- Bible in Basic English (BBE)
- A Psalm. O make a new song to the Lord, because he has done works of wonder; with his right hand, and with his holy arm, he has overcome.
- Darby Translation (DBY)
- A Psalm. Sing ye unto Jehovah a new song: for he hath done wondrous things; his right hand and his holy arm hath wrought salvation for him.
- Webster's Bible (WBS)
- A Psalm. O sing to the LORD a new song; for he hath done marvelous things: his right hand, and his holy arm, hath gotten him the victory.
- Young's Literal Translation (YLT)
- A Psalm. Sing ye to Jehovah a new song, For wonders He hath done, Given salvation to Him hath His right hand and His holy arm.
Read in context
- 1கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.
- 2கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்.
- 3அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது.
Cross references
- Exodus 15:6 யாத்திராகமம் 15:6கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது.
- Isaiah 52:10 ஏசாயா 52:10எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.
- Revelation 14:3 வெளிப்படுத்தின விசேஷம் 14:3அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.
- Psalm 33:3 சங்கீதம் 33:3அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்தசத்தத்தோடேவாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.
- Psalm 96:3 சங்கீதம் 96:3ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
- Psalm 96:1 சங்கீதம் 96:1கர்த்தருக்குப்புதுப்பாட்டைப்பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.
- Revelation 5:9 வெளிப்படுத்தின விசேஷம் 5:9தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
- Colossians 2:15 கொலோசெயர் 2:15துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையி⟨N⟩ல வெற்றிசிறந்தார்.
- John 16:33 யோவான் 16:33என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன். என்றார். அதிகாரம்
- Exodus 15:11 யாத்திராகமம் 15:11கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?
- Luke 1:49 லூக்கா 1:49வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.
- Acts 2:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:11கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.