Revelation 21:19 in Tamil
நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,
Nagaraththu mathilkalin asthibaarangal sagalavitha iraththinangalinaalum alangarikkappattirunthana; muthalaam asthibaaram vachirakkal, irandaavathu inthiraneelam, moondraavathu santhiragaantham, naangaavathu maragatham,
Revelation 21:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவகை இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,
- Open Tamil Contemporary Version
- அந்த நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவித மாணிக்கக் கற்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முதலாவது அஸ்திபாரக்கல் படிகைக்கல், இரண்டாவது நீலக்கல், மூன்றாவது மாணிக்கக்கல், நான்காவது மரகதக்கல்,
- Tamil Easy Reading Version
- நகரத்தின் சுவர்களுக்கான அஸ்திபாரக் கற்கள் விலை உயர்ந்த நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதன் முதல் அஸ்திபாரக்கல் வைரக்கல். இரண்டாவது கல் இந்திரநீலம். மூன்றாவது சந்திர காந்தம். நான்காவது மரகதம்.
Revelation 21:19 in English
- King James Version (KJV)
- And the foundations of the wall of the city [were] garnished with all manner of precious stones. The first foundation [was] jasper; the second, sapphire; the third, a chalcedony; the fourth, an emerald;
- World English Bible (WEB)
- The foundations of the city’s wall were adorned with all kinds of precious stones. The first foundation was jasper, the second sapphire, the third chalcedony, the fourth emerald,
- American Standard Version (ASV)
- The foundations of the wall of the city were adorned with all manner of precious stones. The first foundation was jasper; the second, sapphire; the third, chalcedony; the fourth, emerald;
- Bible in Basic English (BBE)
- The bases of the wall of the town had ornaments of all sorts of beautiful stones. The first base was jasper; the second, sapphire; the third, chalcedony; the fourth, emerald;
- Darby Translation (DBY)
- the foundations of the wall of the city [were] adorned with every precious stone: the first foundation, jasper; the second, sapphire; the third, chalcedony; the fourth, emerald;
- Webster's Bible (WBS)
- And the foundations of the wall of the city [were] garnished with all manner of precious stones. The first foundation [was] jasper; the second, sapphire; the third, a chalcedony; the fourth, an emerald;
- Young's Literal Translation (YLT)
- and the foundations of the wall of the city with every precious stone have been adorned; the first foundation jasper; the second, sapphire; the third, chalcedony; the fourth, emerald;
Read in context
- 17அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது.
- 18அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.
- 19நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,
- 20ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.
- 21பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.
Cross references
- Isaiah 54:11–12 ஏசாயா 54:11–12சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி, உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.
- Exodus 28:17–21 யாத்திராகமம் 28:17–21அதிலே நாலு பத்தி இரத்தினக்கற்களை நிறையப் பதிப்பாயாக; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும், இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும், மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும், நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும். இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாய் இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய நாமம் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாய் வெட்டியிருக்கவேண்டும்.
- Job 28:16–19 யோபு 28:16–19ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல. பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக்கூடாது. பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துகளைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது. எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல.
- Proverbs 3:15 நீதிமொழிகள் 3:15முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.
Original words (Greek)
- And · G2532καί kaí
- foundations · G2310θεμέλιος themélios
- wall · G5038τεῖχος teîchos
- city · G4172πόλις pólis
- garnished · G2885κοσμέω kosméō
- manner · G3956πᾶς pâs
- precious · G5093τίμιος tímios
- stones · G3037λίθος líthos
- first · G4413πρῶτος prōtos
- foundation · G2310θεμέλιος themélios
- jasper · G2393ἴασπις íaspis
- second · G1208δεύτερος deúteros
- sapphire · G4552σάπφειρος sáppheiros
- third · G5154τρίτος trítos
- chalcedony · G5472χαλκηδών chalkēdṓn
- fourth · G5067τέταρτος tétartos
- emerald · G4665σμάραγδος smáragdos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.