Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aathuma Adaikalam Lyricsஆத்தும அடைக்கலம்

Artist to be confirmedFaithWorship

Aathuma Adaikalam Lyrics in Tamil & English

Chorus

ஆத்தும அடைக்கலம்

Aaththuma adaikkalam

Verse 1

ஆத்தும அடைக்கலம் அன்புள்ள யேசுவே,

அய்யா, புகலிடம் தாரும்;

காற்றுப் பெருவெள்ளம்போல் சீற்றங் கொள்ளுது துன்பம்,

கைகொடுத் தெனை ஆற்ற வாரும்.

Aaththuma adaikkalam anpulla yaesuvae,

Ayyaa, pugalidam thaarum;

Kaatrup peruvellambol seetrang kolluthu thunpam,

Kaigoduth thenai aatra vaarum.

Verse 2

நீரே என் நம்பிக்கை, நீரே என் தஞ்சம்;

நீசன் எனக்கு வேறார் அய்யா?

சாரும் நிராயுதன் யான் போரில் விழாப்படித்

தாங்கும் உன் மறைவினில், அய்யா.

Neerae en nambikkai, neerae en thanjsam;

Neesan enakku vaeraar ayyaa?

Saarum niraayuthan yaan poril vizhaappadith

Thaangum un maraivinil, ayyaa.

Verse 3

நீதம் கெட்ட பாவியான், நீதி பரி சுத்தமும்

நிறைந்த நீர் எனக்குத்ர வாதி;

பாதகத்தால் நிறைந்த பேதையான்; கிருபை சத்தியம்

பரிபூரணம் உள்ளோன் நீர் ஜோதி.

Neetham ketta paaviyaan, neethi pari suththamum

Niraintha neer enakkuthra vaathi;

Paathagaththaal niraintha paethaiyaan; kirubai saththiyam

Paribooranam ullon neer jothi.

Verse 4

எந்தப் பாவமும் மூடும் விந்தைக் கிருபை உண்டும்மில்,

என் பாவம் தீர்த்தருளும், கோவே!

நொந்த எனை நீர் ஆற்றிச் சிந்தையைப் புதுப்பித்து

நோக்கும் அதைத் துய்யதாய், தேவே.

Enthap paavamum moodum vinthaik kirubai undummil,

En paavam theerththarulum, kovae!

Nontha enai neer aatris sinthaiyaip puthuppiththu

Nokkum athaith thuyyathaay, thaevae.

Verse 5

சீவ ஊற்றே, உம்மில் யான் தெளிந்து குடிப்பேனாக;

தீராத தாகங்கள் தீரும்;

ஓவா[1] நித்தியமட்டாகப் பாவி என் நெஞ்சில் ஊறும்

உன்னத அன்பன் யேசு, வாரும்.

Seeva ootrae, ummil yaan thelinthu kudippaenaaga;

Theeraatha thaagangal theerum;

Ovaa[1] niththiyamattaagap paavi en nenjsil oorum

Unnatha anpan yaesu, vaarum.

Aathuma Adaikalam PPT – PowerPoint Slides

Download ஆத்தும அடைக்கலம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A