Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Alavilla Meatpae Anbin Aazhiyae Lyricsஅளவில்லா மீட்பே அன்பின் ஆழியே

Artist to be confirmedCrossFaithPraise

Alavilla Meatpae Anbin Aazhiyae Lyrics in Tamil & English

Verse 1

அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே!

இயேசுவால் வந்த பூரண தயவே!

உலகமெல்லாம் மீட்கும் பாக்கியத்திரள்!

யாவர்க்காயும் பாயும்; நீ என் மேல் புரள்

Alavillaa meedpae anpin aazhiyae!

Yesuvaal vantha poorana thayavae!

Ulagamellaam meedkum paakkiyaththiral!

Yaavarkkaayum paayum; nee en mael pural

Verse 2

பாவங்கள் ஏராளம், கறை நிறைந்தேன்

மனங்கசந்து நான் கண்ணீர் சொரிந்தேன்

அழுகை வீணாம்! ரத்தாம்பரக்கடல்!

அலை சுத்திசெய்யும்; வா என் மேல் புரள்

Paavangal aeraalam, karai nirainthaen

Manangasanthu naan kanneer sorinthaen

Azhugai veenaam! raththaambarakkadal!

Alai suththiseyyum; vaa en mael pural

Verse 3

ஆசைகள் அகோரம், கோபம் கொடூரம்

உள்ளத்தை ஆளுது தீமையின் உரம்;

உன் அலைகளின் கீழ், ஓ! பெருங்கடல்!

மீட்புத்தோன்றுதிதோ; வா, என்மேல் புரள்

Aasaigal agoram, kobam kodooram

Ullaththai aaluthu theemaiyin uram;

Un alaigalin keezh, o! perungadal!

Meedpuththondruthitho; vaa, enmael pural

Verse 4

சோதனைகள் மோத, பயங்கள் சூழ

பாழாச்சுதென் ஜீவன் சுகங்கள் மாள

மெய்யாய் இனிச் சுகம்! சுத்த நீர்க்கடல்!

என்னை சுத்திசெய்வாய்; வா, என் மேல் புரள்

Sothanaigal motha, payangal soozha

Paazhaachuthen jeevan sugangal maala

Meyyaay inis sugam! suththa neerkkadal!

Ennai suththiseyvaay; vaa, en mael pural

Verse 5

தயா சாகரமே! வாஞ்சையாய் நின்றேன்

ஜீவிக்கும் ஆச்சர்ய அலை ஓரம் நான்,

திரும்ப வந்தேன் கறை போக்குங் கடல்!

உன்னை விட்டுப் போகேன்; வா, என்மேல் புரள்

Thayaa saagaramae! vaanjsaiyaay nindraen

Jeevikkum aacharya alai oram naan,

Thirumba vanthaen karai pokkung kadal!

Unnai vittup pogaen; vaa, enmael pural

Verse 6

புரண்டுவரும் அலைகளைத் தொட்டேன்

மீட்க வல்லோன் என்னும் இரைச்சல் கேட்டேன்

மீட்படைவேன் என்று நம்பி அலையில்

இதோ மூழ்கிறேன் நான்; வா, என்மேல் புரள்

Puranduvarum alaigalaith thottaen

Meedka vallon ennum iraichal kaettaen

Meedpadaivaen endru nambi alaiyil

Itho moozhkiraen naan; vaa, enmael pural

Verse 7

அல்லேலூயா! இனி என் ஜீவகாலம்

அவர் துதியிலே மகிழ் கொள்ளுவேன்

அளவில்லா மீட்பாம் அன்பின் ஆழியை

இயேசு திறந்தார் எல்லாருக்காகவும்!

Allaelooyaa! ini en jeevagaalam

Avar thuthiyilae magizh kolluvaen

Alavillaa meedpaam anpin aazhiyai

Yesu thiranthaar ellaarukkaagavum!

Alavilla Meatpae Anbin Aazhiyae PPT – PowerPoint Slides

Download அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A