Amaithiyin Thaivamae Iraiva Lyrics in Tamil & English
Chorus
அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே
அருள்வாய் அருள்வாய் யான் ஏங்கித் தேடுகின்ற அமைதி
அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி (×2)
Amaithiyin theyvamae iraivaa en ithayath thalaivanae
Arulvaay arulvaay yaan aengith thaedugindra amaithi
Amaithi amaithi engum endrum amaithi (×2)
Verse 1
நீதிப் பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி அமைதி
தியாகச் சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது அமைதி அமைதி (×2)
அன்பு மொழியை விதைத்திடுவோர்
அருளின் பயிரை அறுத்திடுவார் (×2)
Neethip paathaiyil nadappavar suvaippathu amaithi amaithi
Thiyaagas sigaraththil nilaippavar peruvathu amaithi amaithi (×2)
Anpu mozhiyai vithaiththiduvor
Arulin payirai aruththiduvaar (×2)
Verse 2
உறவைத் தேடியே உரிமைகள் காத்தால் அமைதி அமைதி
உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால் அமைதி அமைதி
ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம்
வீங்கும் ஆயுதம் களைந்திடுவோம் (×2)
Uravaith thaediyae urimaigal kaaththaal amaithi amaithi
Uyirai mathiththaal unmaiyil nilaiththaal amaithi amaithi
Ongum vanmurai ozhiththiduvom
Veengum aayutham kalainthiduvom (×2)
Amaithiyin Thaivamae Iraiva PPT – PowerPoint Slides
Download அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.