Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Arokkiya Mathave Umathu Pugazh Lyricsஆரோக்கிய மாதாவே உமது புகழ்

Artist to be confirmedPraiseHealingFaith

Arokkiya Mathave Umathu Pugazh Lyrics in Tamil & English

Verse 1

ஆரோக்கிய மாதாவே உமது புகழ்

Aarokkiya maathaavae umathu pugazh

Verse 2

பாடித் துதித்திடுவோம் -எந்நாளும்

பாடித் துதித்திடுவோம் (×2)

Paadith thuthiththiduvom -ennaalum

Paadith thuthiththiduvom (×2)

Verse 3

அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே

வசித்திட ஆசை வைத்தாயே (×2)

பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட

அனைவருக்கும் துணை புரிந்தாயே (×2)

Alaigal mothidum kadarkarai thanilae

Vasiththida aasai vaiththaayae (×2)

Palavithak kalaigalum paaril siranthida

Anaivarukkum thunai purinthaayae (×2)

Verse 4

தேன் கமழும் சோலை சூழ்ந்து விளங்கும்

வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே (×2)

வானுலகும் இந்த வையகமும் -அருள்

ஓங்கிட எங்கும் நிறைந்தாயே (×2)

Thaen kamazhum solai soozhnthu vilangum

Vaelaanganniyil amarnthaayae (×2)

Vaanulagum intha vaiyagamum -arul

Ongida engum nirainthaayae (×2)

Verse 5

முடவன் தந்த மோரைப் பருகிக் கொண்டே -அவன்

குறைகளை நீக்கிட நினைத்தாயே (×2)

நடந்திடக் கால்களும் நோயற்ற வாழ்வும்

இயேசுவின் அருளால் கொடுத்தாயே (×2)

Mudavan thantha moraip parugik kondae -avan

Kuraigalai neekkida ninaiththaayae (×2)

Nadanthidak kaalkalum noyatra vaazhvum

Yesuvin arulaal koduththaayae (×2)

Verse 6

பாலன் இயேசுவின் பசியைப் போக்கவே

பசும்பால் வாங்கித் தந்தாயே (×2)

உலகம் உள்ளவரை உன்னை வேண்டிக்கொள்ளும்

அடிமைகள் வாழ்ந்திட அருள்புரிவாய் (×2)

Paalan yesuvin pasiyaip pokkavae

Pasumbaal vaangith thanthaayae (×2)

Ulagam ullavarai unnai vaendikkollum

Adimaigal vaazhnthida arulpurivaay (×2)

Verse 7

சக்தி விளங்கும் உந்தன் தரிசனம் கிடைத்தால்

சஞ்சலம் யாவும் தீர்ந்திடுமே (×2)

பக்தியுடன் உன்னைப் பணிந்து போற்றுபவர்

வாழ்வினிலே இன்பம் நிறைந்திடுமே (×2)

Sakthi vilangum unthan tharisanam kidaiththaal

Sanjsalam yaavum theernthidumae (×2)

Pakthiyudan unnaip paninthu potrubavar

Vaazhvinilae inpam nirainthidumae (×2)

Verse 8

கவலையினால் மனம் வருந்தும் ஏழைகளின்

கண்ணீரைக் கனிவுடன் துடைத்தாயே (×2)

நன்னாளில் வந்து தானங்கள் செய்பவர்

உன்னத நிலைபெற வைத்தாயே (×2)

Kavalaiyinaal manam varunthum aezhaigalin

Kanneeraik kanivudan thudaiththaayae (×2)

Nannaalil vanthu thaanangal seypavar

Unnatha nilaibera vaiththaayae (×2)

Arokkiya Mathave Umathu Pugazh PPT – PowerPoint Slides

Download ஆரோக்கிய மாதாவே உமது புகழ் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A