Azhagaana Iravin Neram Kulirale Ulagam Vaadum Lyrics in Tamil & English
Chorus
அழகான இரவின் நேரம் குளிராலே உலகம் வாடும்
சிசுவாக இயேசு பாலன் உலகில் உதித்தார்
சங்கீதம் தூதர் பாட வனமீது மேய்ப்பர் கேட்க
மனமெங்கும் பூரிப்பாக நெஞ்சம் மகிழ்ந்தார் அன்று
Azhagaana iravin naeram kuliraalae ulagam vaadum
Sisuvaaga yesu paalan ulagil uthiththaar
Sangeetham thoothar paada vanameethu maeyppar kaedka
Manamengum poorippaaga nenjsam magizhnthaar andru
Verse 1
அன்னைமரி கைகள் மீது தேவன் அமர்ந்தார்
தேவன் நம்மேல் வைத்த அன்பை சொல்லி மகிழ்ந்தார்
மீட்பைத்தர வந்தாரே என்று புகழ்ந்தார்
தேவன் தந்த வார்த்தை இவர் என்று நினைத்தார்
வாழ்வை தந்த தெய்வமே வாழ்க என்று சொல்ல
Annaimari kaigal meethu thaevan amarnthaar
Thaevan nammael vaiththa anpai solli magizhnthaar
Meedpaiththara vanthaarae endru pugazhnthaar
Thaevan thantha vaarththai ivar endru ninaiththaar
Vaazhvai thantha theyvamae vaazhka endru solla
Verse 2
ஆதாம்முதல் யோவான் வரை சொல்லியிருந்தார்
தேவன் வரும் நாளுக்காக பார்த்துஇருந்தார்
வேதம் சொல்லும் நம் மீட்பர் என்று வருவார்
எண்ணம் எங்கும் தினந்தோறும்பார்த்து இருந்தார்
மீட்பை தந்த தெய்வமே வாரும் என்று சொல்ல
Aathaammuthal yovaan varai solliyirunthaar
Thaevan varum naalukkaaga paarththuirunthaar
Vaetham sollum nam meedpar endru varuvaar
Ennam engum thinanthorumbaarththu irunthaar
Meedpai thantha theyvamae vaarum endru solla
Verse 3
உன்னதத்தை நோக்கி நெஞ்சம் மாற்றம் பெறுமே
உண்மை நிலை எங்கும் பூமி மாற்றம் கொள்ளுமே
இல்லை என்ற ஏழைக்கொரு காலம் வந்ததே
இன்ப நிலை ஏகும் காலம் தெய்வம் தந்ததே
நீரே எங்கள் தெய்வமே வாழ்க என்று சொல்ல
Unnathaththai nokki nenjsam maatram perumae
Unmai nilai engum poomi maatram kollumae
Illai endra aezhaikkoru kaalam vanthathae
Inpa nilai aegum kaalam theyvam thanthathae
Neerae engal theyvamae vaazhka endru solla
Azhagaana Iravin Neram Kulirale Ulagam Vaadum PPT – PowerPoint Slides
Download -அழகான இரவின் நேரம் குளிராலே உலகம் வாடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.