Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Idayargal Thantha Kaanikkai Lyricsஇடையர்கள் தந்த காணிக்கை போல

Artist to be confirmedWorshipPraise

Also searched as: Idayargal Thantha Kanikai

Idayargal Thantha Kaanikkai Lyrics in Tamil & English

Verse 1

இடையர்கள் தந்த காணிக்கை போல

இருப்பதை நானும் எடுத்து வந்தேன்

கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்

கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (×2)

Idaiyarkal thantha kaanikkai pola

Iruppathai naanum eduththu vanthaen

Kodaigalil ellaam sirantha en ithayam

Koduppathu nalam ena padaiththu nindraen (×2)

Chorus

இயேசு பாலனே ஏற்றிடுமே

நேச ராஜனே ஏற்றிடுமே (×2)

Yesu paalanae aetridumae

Naesa raajanae aetridumae (×2)

Verse 2

கடைநிலை வாழும் மனிதரை மீட்க

அடிமையின் தன்மையை எடுத்தவனே

உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து

மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (×2)

Kadainilai vaazhum manitharai meedka

Adimaiyin thanmaiyai eduththavanae

Udaimaigal pathavigal yaavaiyum thuranthu

Madamaiyil magimaiyaik koduththavanae (×2)

Verse 3

நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து

நிம்மதி தந்திட வந்தவனே

வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல

மனிதரை வானகம் சேர்ப்பவனே (×2)

Nilaithadumaarum manangalil nirainthu

Nimmathi thanthida vanthavanae

Valaigalil meengalaip pidippathaip pola

Manitharai vaanagam saerppavanae (×2)

Idayargal Thantha Kaanikkai PPT – PowerPoint Slides

Download இடையர்கள் தந்த காணிக்கை போல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I