Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mannuirai Meetka Puvi Lyricsமன்னுயிரை மீட்கப் புவி

Artist to be confirmedPraiseWorship

Mannuirai Meetka Puvi Lyrics in Tamil & English

Chorus

சரணங்கள்

Saranangal

Verse 1

மன்னுயிரை மீட்கப் புவி தன்னிலெழ உன்னியநல்

புண்ணிய பரன் செயலை என்னென்று புகழ்ந்திடுவேன்

Mannuyirai meedkap puvi thannilezha unniyanal

Punniya paran seyalai ennendru pugazhnthiduvaen

Verse 2

வானாதி வானங்கொள்ளா மகிமைப் பராபரனார்

மாது மரிவயிற்றினில் மனுவுருவானதென்ன?

Vaanaathi vaanangollaa magimaip paraabaranaar

Maathu marivayitrinil manuvuruvaanathenna?

Verse 3

சராசரம் படைத்த சர்வ வல்ல தேவனுக்கு

தங்குதற்கு இடமில்லையோ? தாபரிக்க வீடில்லையோ?

Saraasaram padaiththa sarva valla thaevanukku

Thangutharku idamillaiyo? thaabarikka veedillaiyo?

Verse 4

சேனைத் தூதர்கள் கூட சிறப்புடன் கவிபாட

கானகக் கோனார் தேட கர்த்தரானாரோ நீட?

Saenaith thootharkal kooda sirappudan kavibaada

Kaanagak konaar thaeda karththaraanaaro needa?

Verse 5

தூய படைகள் கோடி சூழ்ந்திலங்கும் பரனே

பாயும் மாடுகளாமோ பக்கத்துணையாவது?

Thooya padaigal kodi soozhnthilangum paranae

Paayum maadugalaamo pakkaththunaiyaavathu?

Verse 6

கர்த்தத்துவங்கள் தாங்கும் காருண்ய பாக்கியமே

சுற்றி வைக்கப் பழந்துணியோ! தூங்கிடவும் புல்லணையோ?

Karththaththuvangal thaangum kaarunya paakkiyamae

Sutri vaikkap pazhanthuniyo! thoongidavum pullanaiyo?

Verse 7

பண்டு தீர்க்கர்கள் முந்து பகர்ந்தபடியே வந்து

சொந்தஜனம் இஸ்ரவேலின் சூரியனானீரோ?

Pandu theerkkarkal munthu pagarnthabadiyae vanthu

Sonthajanam isravaelin sooriyanaaneero?

Verse 8

சீனாய்மலை தனிலே ஜொலித்த மகிமை எங்கே?

தானே மாமிசத்துள்ளே தங்கிட மறைந்தீரோ?

Seenaaymalai thanilae joliththa magimai engae?

Thaanae maamisaththullae thangida maraintheero?

Verse 9

ஏதேன் வனக் காவினில் எட்டிப் பறித்த பழத்

தீதுவினைகள் தீர ஸ்திரீயின் வித்தானீரோ?

Aethaen vanak kaavinil ettip pariththa pazhath

Theethuvinaigal theera sthireeyin viththaaneero?

Verse 10

பாவியான என்மேலே பட்சம் வைத்தாதரித்து

ஜீவனைக்கொடுக்க இந்தச் சேணுலகம் பிறந்தீரோ?

Paaviyaana enmaelae patcham vaiththaathariththu

Jeevanaikkodukka inthas saenulagam pirantheero?

Mannuirai Meetka Puvi PPT – PowerPoint Slides

Download மன்னுயிரை மீட்கப் புவி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M