Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ootu Nee Lyricsமுடிவு பரியந்தம் ஓடு

Artist to be confirmedFaith

Ootu Nee Lyrics in Tamil & English

Chorus

முடிவு பரியந்தம் ஓடு

Mudivu pariyantham odu

Verse 1

ஓடு நீ ஓடு நீ ஓடு உன்னதர் பணியிது ஓடு

உண்மையாய் செய்திட ஓடு முடிவுபரியந்தம் ஓடு

Odu nee odu nee odu unnathar paniyithu odu

Unmaiyaay seythida odu mudivubariyantham odu

Verse 2

மன்னரின் பணியிது ஓடு முன்னோடி மோசேயைப் பார்த்து

எகிப்தின் இன்பத்தை வெறுத்து முன்மாதிரியானான் உனக்கு உழைத்து

நின்றான் உலகை வென்றானே (×2)

Mannarin paniyithu odu munnodi mosaeyaip paarththu

Egipthin inpaththai veruththu munmaathiriyaanaan unakku uzhaiththu

Nindraan ulagai vendraanae (×2)

Verse 3

அன்பரின் பணியிது ஓடு அதில் அசதிதான் கூடாது

துன்பங்கள் வரும்போது துணிந்து முனைவதே அழகு

முயன்றதை முடித்துவிடு முனைந்து முன்னேறு (×2)

Anparin paniyithu odu athil asathithaan koodaathu

Thunpangal varumbothu thuninthu munaivathae azhagu

Muyandrathai mudiththuvidu munainthu munnaeru (×2)

Verse 4

ஆபத்து வரும் வேளை நீ அஞ்சவே கூடாது

எதிரி தோற்றவன்தான் எதிர்த்திடு தினம் அவனை

அழைப்பில் குழப்பம் வேண்டாம் அழைத்தவர் முன் செல்வதால் (×2)

Aabaththu varum vaelai nee anjsavae koodaathu

Ethiri thotravanthaan ethirththidu thinam avanai

Azhaippil kuzhappam vaendaam azhaiththavar mun selvathaal (×2)

Verse 5

சோதனை வரும்போது நீ சோர்ந்திடலாகாது

வேதனை வரும்போது வியர்த்து நிற்பது தவறு

துணிந்து போராடு ஜீவ கிரீடமுண்டு (×2)

Sothanai varumbothu nee sornthidalaagaathu

Vaethanai varumbothu viyarththu nirpathu thavaru

Thuninthu poraadu jeeva kireedamundu (×2)

Ootu Nee PPT – PowerPoint Slides

Download முடிவு பரியந்தம் ஓடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O