Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Oru Maruntharum Kurumarunthu Lyricsஒரு மருந்தரும் குருமருந்து

Artist to be confirmedHealingPraise

Oru Maruntharum Kurumarunthu Lyrics in Tamil & English

Chorus

ஒரு மருந்தரும் குருமருந்-(து)

உம்பரத்தில் நான் கண்டேனே.

Oru maruntharum kurumarun-(thu)

Umbaraththil naan kandaenae.

Bridge

அருள் மருந்துடன் ஆனந்த மருந்து,

ஆதியிற்றனாய் முளைத்த மருந்து,

வரும் வினைகளை மாற்றும் மருந்து,

வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து.

சரணங்கள்

Arul marunthudan aanantha marunthu,

Aathiyitranaay mulaiththa marunthu,

Varum vinaigalai maatrum marunthu,

Varumaiyullorkkae vaayththa marunthu.

Saranangal

Verse 1

சிங்கார வனத்தில் செழித்த மருந்து,

ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து,

அங்குவிளை பவம் மாற்றும் மருந்து,

வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து

Singaara vanaththil sezhiththa marunthu,

Jeevatharu meethil padarntha marunthu,

Anguvilai pavam maatrum marunthu,

Valla sarppa visham maayththa marunthu

Verse 2

மோசே முதல் முன்னோர் காணா மருந்து,

மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து,

தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து,

தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து

Mosae muthal munnor kaanaa marunthu,

Motcha magimaiyaik kaattum marunthu,

Thaesaththor piniyaith theerththa marunthu,

Theerkkatharisigal seppiya marunthu

Verse 3

தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து,

செவிடு குருடூமை தின்ற மருந்து,

மானா திருத்துவ மான மருந்து,

மனுவாய் உலகினில் வந்த மருந்து.

Theeraatha kushdaththaith theerththa marunthu,

Sevidu kurudoomai thindra marunthu,

Maanaa thiruththuva maana marunthu,

Manuvaay ulaginil vantha marunthu.

Verse 4

செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து,

ஜீவன் தவறா தருளும் மருந்து,

பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து,

பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து.

Seththorai uyiro dezhuppum marunthu,

Jeevan thavaraa tharulum marunthu,

Paththarais suththigariththidum marunthu,

Parama vaazhvinil saerkkum marunthu.

Oru Maruntharum Kurumarunthu PPT – PowerPoint Slides

Download ஒரு மருந்தரும் குருமருந்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O