Vareero Vaan Pathiyae Lyrics in Tamil & English
Chorus
வாரீரோ வான்பதியே சேரீரோ திருமதியே
தீரீரோ எம் குறைவை தாரீரோ உம் நிறைவை
சரணங்கள்
Vaareero vaanpathiyae saereero thirumathiyae
Theereero em kuraivai thaareero um niraivai
Saranangal
Verse 1
பூ உலகில் போற்றும் உம்மை
புகழ்ந்து மேலோகில் வாழ்த்த எம்மை
தீ உலகில் நின்று தீவிரமாய்
சேர்த்துக் கொள்வீரே உம்மிடமாய்
Poo ulagil potrum ummai
Pugazhnthu maelogil vaazhththa emmai
Thee ulagil nindru theeviramaay
Saerththuk kolveerae ummidamaay
Verse 2
கண்டதில்லை நேர் முகமாய்
கல்வாரியின் காந்தனை நாம்
கண்டிடவே முகமுகமாய்
கர்த்தா உன் சாயல் முழுமையுமாய்
Kandathillai naer mugamaay
Kalvaariyin kaanthanai naam
Kandidavae mugamugamaay
Karththaa un saayal muzhumaiyumaay
Verse 3
காயம் கொண்ட கால் கரமும்
கருணை பொங்கும் விலாபுரமும்
நேயன் உன் அங்க மகத்துவமாம்
நீர் வரும் போதுள்ளம் பொங்கிடுமாம்
Kaayam konda kaal karamum
Karunai pongum vilaaburamum
Naeyan un anga magaththuvamaam
Neer varum pothullam pongidumaam
Verse 4
இருப்பதுவும் நாம் இவ்வுலகில்
இயேசுவே உம் மா தயவில்
விருப்பம் முழுவதும் உம் வரவில்
வேந்தனே வாருமே நீர் விரைவில்
Iruppathuvum naam ivvulagil
Yesuvae um maa thayavil
Viruppam muzhuvathum um varavil
Vaenthanae vaarumae neer viraivil
Verse 5
இயேசுவே எம் இன்ப முகம்
ஏழையாம் காண மகிழும் முகம்
வீசும் மின்னொளியென விசும்பினில் நீர்
வேகமே வந்தெம்மை சேர்த்துக் கொள்வீர்
Yesuvae em inpa mugam
Aezhaiyaam kaana magizhum mugam
Veesum minnoliyena visumbinil neer
Vaegamae vanthemmai saerththuk kolveer
Vareero Vaan Pathiyae PPT – PowerPoint Slides
Download வாரீரோ வான்பதியே சேரீரோ திருமதியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.