Vinnnnorkal Pottum Aanndavaa Lyrics in Tamil & English
Verse 1
விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா, உம் மேன்மை அற்புதம்;
பளிங்குபோலத் தோன்றுமே உம் கிருபாசனம்!
Vinnorkal potrum aandavaa, um maenmai arputham;
Palingubolath thondrumae um kirubaasanam!
Verse 2
நித்தியானந்த தயாபரா, அல்பா ஒமேகாவே,
மா தூயர் போற்றும் ஆண்டவா ராஜாதி ராஜாவே!
Niththiyaanantha thayaabaraa, alpaa omaegaavae,
Maa thooyar potrum aandavaa raajaathi raajaavae!
Verse 3
உம் ஞானம் தூய்மை வல்லமை அளவிறந்ததே;
நீர் தூயர், தூயர்; உந்தனை துதித்தல் இன்பமே!
Um njaanam thooymai vallamai alaviranthathae;
Neer thooyar, thooyar; unthanai thuthiththal inpamae!
Verse 4
அன்பின் சொரூபி தேவரீர், நான் பாவியாயினும்,
என் நீச நெஞ்சைக் கேட்கிறீர் உம் சொந்தமாகவும்.
Anpin soroobi thaevareer, naan paaviyaayinum,
En neesa nenjsaik kaedkireer um sonthamaagavum.
Verse 5
உம்மைப்போல் தயை மிகுந்த ஓர் தந்தையும் உண்டோ?
உம்மைப்போல் அன்பு நிறைந்த தாய்தானும் ஈண்டுண்டோ?
Ummaippol thayai miguntha or thanthaiyum undo?
Ummaippol anpu niraintha thaaythaanum eendundo?
Verse 6
என் பாவமெல்லாம் மன்னித்தீர் சுத்தாங்கம் நல்கினீர்;
என் குற்றமெல்லாம் தாங்கினீர் அன்பின் பிரவாகம் நீர்!
En paavamellaam manniththeer suththaangam nalkineer;
En kutramellaam thaangineer anpin piravaagam neer!
Verse 7
மேலோக நித்திய பாக்கியத்தை நான் பெற்று வாழுவேன்;
உம் திவ்விய இன்ப முகத்தை கண்ணுற்றுப் பூரிப்பேன்.
Maeloga niththiya paakkiyaththai naan petru vaazhuvaen;
Um thivviya inpa mugaththai kannutrup poorippaen.
Vinnnnorkal Pottum Aanndavaa PPT – PowerPoint Slides
Download விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா உம் மேன்மை அற்புதம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.