Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Naamam Ontrai Nambuveer Lyricsஇயேசு நாமம் ஒன்றை நம்புவீர்

Artist to be confirmedFaithPraise

Yesu Naamam Ontrai Nambuveer Lyrics in Tamil & English

Chorus

இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்

பூலோகத்தாரே

சரணங்கள்

Yesu naamam ondrai nambuveer

Poologaththaarae

Saranangal

Verse 1

இயேசு நாமம் ஒன்றை நம்பும்

ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம்

பேசும் வேறே நாமமெல்லாம்

பேயின் வம்பும் தும்புமாகும்

Yesu naamam ondrai nambum

Ratchanyaththuk kithuvae sthambam

Paesum vaerae naamamellaam

Paeyin vambum thumbumaagum

Verse 2

மூவரிலொருவருமாய்

முத்தொழில் புரிவோருமாய்

ஆவியாய் அனாதியாய்

ரூப ரூப வஸ்துவான

Moovariloruvarumaay

Muththozhil purivorumaay

Aaviyaay anaathiyaay

Rooba rooba vasthuvaana

Verse 3

ஐயன் இயேசையா உரைத்து

ஆரணத் தெழுதி வைத்து

வையகம் புரக்கும் நாயன்

தையல் தரும் தூயசேயன்

Aiyan yesaiyaa uraiththu

Aaranath thezhuthi vaiththu

Vaiyagam purakkum naayan

Thaiyal tharum thooyasaeyan

Verse 4

பார்த்திபன் தாவீது குல

கோத்திர கன்னிமரிபால்

நேத்திரம் போல உதித்துத்

தாத்திரி ரட்சகனாக

Paarththiban thaaveethu kula

Koththira kannimaribaal

Naeththiram pola uthiththuth

Thaaththiri ratchaganaaga

Verse 5

பூதலத் தஞ்ஞான இருள்

போக்கவே மெஞ்ஞான பெரும்

ஜோதியாய் விளங்கி நிற்கும்

நீதியின் சூரியன் ஆன

Poothalath thanjnjaana irul

Pokkavae menjnjaana perum

Jothiyaay vilangi nirkum

Neethiyin sooriyan aana

Verse 6

பாவிகளீடேற மோட்ச

பாக்கியம் பெறுவதற்காய்

ஜீவன் விட்டுயிர்த்தெழுந்து

சேணுலகுக் கேறிச்சென்று

Paavigaleedaera motcha

Paakkiyam peruvatharkaay

Jeevan vittuyirththezhunthu

Saenulaguk kaerichendru

Verse 7

விண்டலத்தவர்கள் சூழ

கண்டலகை பதறிவிழ

மண்டலத்தைத் தீர்வை செய்ய

கொண்டல் மிசை வரும் ராஜன்

Vindalaththavarkal soozha

Kandalagai patharivizha

Mandalaththaith theervai seyya

Kondal misai varum raajan

Yesu Naamam Ontrai Nambuveer PPT – PowerPoint Slides

Download இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y