1 Corinthians 6:16 in Tamil
வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரேமாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.
Vaesiyodu isainthirukkiravan avaludanae orae sareeramaayirukkiraanendru ariyeerkalaa? iruvarum oraemaamsamaayiruppaarkal endru solliyirukkirathae.
1 Corinthians 6:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வேசியோடு இணைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாக இருக்கிறானென்று உங்களுக்குத் தெரியாதா? இருவரும் ஒரே மாம்சமாக இருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.
- Open Tamil Contemporary Version
- தன்னை ஒரு வேசியுடன் இணைக்கிறவன், அவளுடன் ஒரே உடலாய் இணைகிறான் என்பதை அறியாதிருக்கிறீர்களா? ஏனெனில், வேதவசனம் சொல்கிறபடி, “இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.”
- Tamil Easy Reading Version
- “இருவர் ஒன்றாவார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. அதனால் வேசியோடு உடலுறவு கொண்ட ஒருவன் அவளோடு ஒன்றாகிறான் என்பது உங்களுக்குத் தெரியும்.
1 Corinthians 6:16 in English
- King James Version (KJV)
- What? know ye not that he which is joined to an harlot is one body? for two, saith he, shall be one flesh.
- World English Bible (WEB)
- Or don’t you know that he who is joined to a prostitute is one body? For, “The two”, he says, “will become one flesh.”
- American Standard Version (ASV)
- Or know ye not that he that is joined to a harlot is one body? for, The twain, saith he, shall become one flesh.
- Bible in Basic English (BBE)
- Or do you not see that he who is joined to a loose woman is one body with her? for God has said, The two of them will become one flesh.
- Darby Translation (DBY)
- Do ye not know that he [that is] joined to the harlot is one body? for the two, he says, shall be one flesh.
- Webster's Bible (WBS)
- What? know ye not that he who is joined to a harlot is one body? for two, saith he, shall be one flesh.
- Young's Literal Translation (YLT)
- have ye not known that he who is joined to the harlot is one body? 'for they shall be — saith He — the two for one flesh.'
Read in context
- 14தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார்.
- 15உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே.
- 16வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரேமாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.
- 17அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.
- 18வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
Cross references
- Genesis 2:24 ஆதியாகமம் 2:24இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
- Ephesians 5:31 எபேசியர் 5:31இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரேமாம்சமாயிருப்பார்கள்.
- Mark 10:8 மாற்கு 10:8அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
- Matthew 19:5–6 மத்தேயு 19:5–6இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
- Matthew 21:31–32 மத்தேயு 21:31–32இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும்மனஸ்தாபப்படவில்லை என்றார்.
- Judges 16:1 நியாயாதிபதிகள் 16:1பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்.
- Genesis 34:31 ஆதியாகமம் 34:31அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்.
- Genesis 38:24 ஆதியாகமம் 38:24ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.
- Hebrews 11:31 எபிரெயர் 11:31விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்.
- Genesis 38:15 ஆதியாகமம் 38:15யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து,
Original words (Greek)
- What · G2228ἤ ḗ
- ye · G1492εἴδω eídō
- not · G3756οὐ ou
- that · G3754ὅτι hóti
- which · G3588ὁ ho
- joined · G2853κολλάω kolláō
- harlot · G4204πόρνη pórnē
- is · G2076ἐστί estí
- one · G1520εἷς heîs
- body · G4983σῶμα sōma
- for · G1063γάρ gár
- two · G1417δύο dýo
- he · G5346φημί phēmí
- be · G2071ἔσομαι ésomai
- one · G1520εἷς heîs
- flesh · G4561σάρξ sárx
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.