2 Kings 19:3 in Tamil
இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைபேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை.
Ivarkal avanai nokki: intha naal nerukkamum kandithamum thooshanamum anubavikkira naal; pillaibaeru nokkiyirukkirathu, peravo pelanillai.
2 Kings 19:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கடிந்துகொள்ளுதலும் அவமானமும் அநுபவிக்கிற நாள்; பிரசவநேரம் நெருங்கியிருக்கிறது, பெற்றெடுக்கவோ பெலனில்லை.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் அவனிடம், “எசேக்கியா அரசன் கூறுவது இதுவே: இன்றைய நாள் துயரமும், கண்டனமும், அவமானமும் நிறைந்த நாளாய் இருக்கிறது. பிரசவ வேளையில் பிள்ளைகளைப் பெற்றெடுக்கப் பெலனில்லாதவர்களைப்போல நாங்கள் இருக்கிறோம்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் ஏசாயாவிடம், “‘இன்று பிரச்சனைக்குரிய நாள். நாம் தவறாக உள்ளோம் என்பதைக் காட்டும் நாள். இது குழந்தைகளின் பிரசவ காலம் போல உள்ளது. ஆனால் குழந்தையைப் பெறுவதற்கோ பலமில்லை.
2 Kings 19:3 in English
- King James Version (KJV)
- And they said unto him, Thus saith Hezekiah, This day [is] a day of trouble, and of rebuke, and blasphemy: for the children are come to the birth, and [there is] not strength to bring forth.
- World English Bible (WEB)
- They said to him, “Hezekiah says, ‘Today is a day of trouble, of rebuke, and of rejection; for the children have come to the point of birth, and there is no strength to deliver them.
- American Standard Version (ASV)
- And they said unto him, Thus saith Hezekiah, This day is a day of trouble, and of rebuke, and of contumely; for the children are come to the birth, and there is not strength to bring forth.
- Bible in Basic English (BBE)
- And they said to him, Hezekiah says, This day is a day of trouble and punishment and shame; for the children are ready to come to birth, but there is no strength to give birth to them.
- Darby Translation (DBY)
- And they said to him, Thus says Hezekiah: This day is a day of trouble and of rebuke and of reviling; for the children are come to the birth, and there is not strength to bring forth.
- Webster's Bible (WBS)
- And they said to him, Thus saith Hezekiah, This day [is] a day of trouble, and of rebuke, and blasphemy: for the children have come to the birth, and [there is] not strength to bring forth.
- Young's Literal Translation (YLT)
- and they say unto him, 'Thus said Hezekiah — A day of distress, and rebuke, and despising [is] this day; for come have sons unto the birth, and power there is not to bring forth.
Read in context
- 1ராஜாவாகிய எசேக்கியா அதைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,
- 2அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்துக்கு இரட்டு உடுத்திக்கொண்டவர்களாக அனுப்பினான்.
- 3இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைபேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை.
- 4ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனைசெய்வார்; ஆகையால் இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.
- 5இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.
Cross references
- Isaiah 66:9 ஏசாயா 66:9பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.
- Jeremiah 30:5–7 எரேமியா 30:5–7கர்த்தர்சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை. ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன? ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.
- Hosea 13:13 ஓசியா 13:13பிரசவஸ்திரீயின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பேறுகாலமட்டும் அவன் நிற்கவில்லை.
- Isaiah 26:17–18 ஏசாயா 26:17–18கர்த்தாவே, பேறுகாலம் சமீபித்திருக்கையில் வேதனைப்பட்டு, தன் அம்பாயத்தில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம். நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு இரட்சிப்பையும் செய்யமாட்டாதிருக்கிறோம்; பூச்சக்கரத்துக்குடிகள் விழுகிறதுமில்லை.
- Hebrews 3:15–16 எபிரெயர் 3:15–16இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே. கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா?
- 2 Kings 18:29 2 இராஜாக்கள் 18:29எசேக்கியா உங்களை வஞ்சியாதபடிபாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.
- Psalm 39:11 சங்கீதம் 39:11அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே. (சேலா.)
- Psalm 123:3–4 சங்கீதம் 123:3–4எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால்மிகவும் நிறைந்திருக்கிறோம். சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது. (தாவீது பாடின ஆரோகண சங்கீதம்.)
- Psalm 95:8 சங்கீதம் 95:8இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
Original words (Hebrew)
- said · H559אָמַר ʼâmar
- saith · H559אָמַר ʼâmar
- Hezekiah · H2396חִזְקִיָּה Chizqîyâh
- day · H3117יוֹם yôwm
- day · H3117יוֹם yôwm
- trouble · H6869צָרָה tsârâh
- rebuke · H8433תּוֹכֵחָה tôwkêchâh
- blasphemy · H5007נְאָצָה nᵉʼâtsâh
- children · H1121בֵּן bên
- come · H935בּוֹא bôwʼ
- birth · H4866מִשְׁבֵּר mishbêr
- strength · H3581כֹּחַ kôach
- forth · H3205יָלַד yâlad
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.