2 Samuel 15:12 in Tamil
அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில்திரளாய் வந்து கூடினார்கள்.
Apsalom paligalais seluththumbothu, thaaveethin aalosanaikkaaranaagiya agiththoppael ennum keeloniyanaiyum avan ooraagiya keelovilirunthu varavazhaippiththaan; appadiyae kattuppaadu palaththu, janangal apsalominidaththilthiralaay vanthu koodinaarkal.
2 Samuel 15:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனான அகித்தோப்பேல் என்னும் கிலோனியனையும் அவன் ஊரான கீலோவிலிருந்து வரவழைத்தான்; அப்படியே கட்டுப்பாடு பெலத்து, மக்கள் அப்சலோமிடம் திரளாக வந்து கூடினார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்சலோம் பலிகளை செலுத்தும்போது, தாவீதின் ஆலோசகனான அகிதோப்பேல் என்னும் கீலொனியனை அவனுடைய சொந்தப் பட்டணமான கிலொவிலிருந்து வரும்படி ஆளனுப்பினான். அப்படியே சதித்திட்டமும் வலுவடைந்து, அப்சலோமின் ஆதரவாளர்களும் பெருகினார்கள்.
- Tamil Easy Reading Version
- அகித்தோப்பேல் தாவீதுக்கு ஆலோசனை வழங்குபவர்களில் ஒருவன். அவன் கீலோ என்னும் ஊரைச் சேர்ந்தவன். அப்சலோம் பலிகளைச் செலுத்தும் போது அகித்தோப்பேலை நகரத்திலிருந்து (கீலோவிலிருந்து) வருமாறு கூறினான். அப்சலோமின் திட்டங்கள் சரிவர நிறைவேறிக்கொண்டிருந்தன. ஜனங்களில் பலர் அவனுக்கு ஆதரவளிக்க முன்வந்தனர்.
2 Samuel 15:12 in English
- King James Version (KJV)
- And Absalom sent for Ahithophel the Gilonite, David’s counsellor, from his city, [even] from Giloh, while he offered sacrifices. And the conspiracy was strong; for the people increased continually with Absalom.
- World English Bible (WEB)
- Absalom sent for Ahithophel the Gilonite, David’s counselor, from his city, even from Giloh, while he was offering the sacrifices. The conspiracy was strong, for the people increased continually with Absalom.
- American Standard Version (ASV)
- And Absalom sent for Ahithophel the Gilonite, David’s counsellor, from his city, even from Giloh, while he was offering the sacrifices. And the conspiracy was strong; for the people increased continually with Absalom.
- Bible in Basic English (BBE)
- And Absalom sent for Ahithophel the Gilonite, one of David's helpers, from Giloh his town, while he was making the offerings. And the design against David became strong, for more and more people were joined to Absalom.
- Darby Translation (DBY)
- And Absalom sent for Ahithophel the Gilonite, David's counsellor, from his city, from Giloh, while he offered the sacrifices. And the conspiracy gathered strength; and the people increased continually with Absalom.
- Webster's Bible (WBS)
- And Absalom sent for Ahithophel the Gilonite, David's counselor, from his city, [even] from Giloh, while he offered sacrifices. And the conspiracy was strong; for the people increased continually with Absalom.
- Young's Literal Translation (YLT)
- and Absalom sendeth Ahithophel the Gilonite, a counsellor of David, out of his city, out of Gilo, in his sacrificing sacrifices; and the conspiracy is strong, and the people are going and increasing with Absalom.
Read in context
- 10அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.
- 11எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடேகூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்.
- 12அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில்திரளாய் வந்து கூடினார்கள்.
- 13அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதினிடத்தில் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைப் பற்றிப்போகிறது என்றான்.
- 14அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்.
Cross references
- 2 Samuel 15:31 2 சாமுவேல் 15:31அப்சலோமோடே கட்டுப்பாடுபண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்.
- Psalm 41:9 சங்கீதம் 41:9என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
- Joshua 15:51 யோசுவா 15:51கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று.
- Titus 1:16 தீத்து 1:16அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்னுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்தநற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.
- Psalm 55:12–14 சங்கீதம் 55:12–14என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன். எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன். நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடேதேவாலயத்துக்குப் போனோம்.
- Proverbs 21:27 நீதிமொழிகள் 21:27துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடேசெலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.
- 1 Kings 21:12 1 இராஜாக்கள் 21:12அவர்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தினார்கள்.
- 2 Samuel 17:23 2 சாமுவேல் 17:23அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.
- 2 Samuel 17:14 2 சாமுவேல் 17:14அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்; இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும் பொருட்டு, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக்கர்த்தர் கட்டளையிட்டார்.
- Numbers 23:14 எண்ணாகமம் 23:14அவனைப் பிஸ்காவின் கொடுமுடியில் இருக்கிற சோப்பீமின் வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.
- Micah 7:5–6 மீகா 7:5–6சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு. மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே.
- 1 Kings 21:9 1 இராஜாக்கள் 21:9அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி,
Original words (Hebrew)
- Absalom · H53אֲבִישָׁלוֹם ʼĂbîyshâlôwm
- sent · H7971שָׁלַח shâlach
- Ahithophel · H302אֲחִיתֹפֶל ʼĂchîythôphel
- Gilonite · H1526גִּילֹנִי Gîylônîy
- David’s · H1732דָּוִד Dâvid
- counsellor · H3289יָעַץ yâʻats
- city · H5892עִיר ʻîyr
- Giloh · H1542גִּלֹה Gilôh
- offered · H2076זָבַח zâbach
- sacrifices · H2077זֶבַח zebach
- conspiracy · H7195קֶשֶׁר qesher
- strong · H533אַמִּיץ ʼammîyts
- people · H5971עַם ʻam
- increased · H7227רַב rab
- continually · H1980הָלַךְ hâlak
- Absalom · H53אֲבִישָׁלוֹם ʼĂbîyshâlôwm
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.