2 Samuel 15:31 in Tamil
அப்சலோமோடே கட்டுப்பாடுபண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்.
Apsalomodae kattuppaadubanninavarkaludan agiththoppaelum saernthirukkiraan endru thaaveethukku arivikkappattabothu, thaaveethu: karththaavae, agiththoppaelin aalosanaiyaip payiththiyamaakkividuveeraaga endraan.
2 Samuel 15:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்சலோமோடு சதி செய்தவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: யெகோவாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பைத்தியமாக்கிவிடுவீராக என்றான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அப்சலோமோடு சேர்ந்து சூழ்ச்சி செய்தவர்களில் அகிதோப்பேலும் ஒருவன் என்று தாவீதுக்கு அறிவித்தார்கள். எனவே தாவீது, “யெகோவாவே! அகிதோப்பேலின் ஆலோசனைகளை மூடத்தனமாக்கிவிடும்” என்று மன்றாடினான்.
- Tamil Easy Reading Version
- ஒருவன் தாவீதிடம், “அப்சலோமோடு திட்டமிட்டவர்களில் அகித்தோப்பேலும் ஒருவன்” என்றான். அப்போது தாவீது, “கர்த்தாவே நீர் அகித்தோப்பேலின் உபதேசம் பயனற்றவையாக இருக்கும்படி செய்யும்” என்று ஜெபம் செய்தான்.
2 Samuel 15:31 in English
- King James Version (KJV)
- And [one] told David, saying, Ahithophel [is] among the conspirators with Absalom. And David said, O LORD, I pray thee, turn the counsel of Ahithophel into foolishness.
- World English Bible (WEB)
- Someone told David, saying, “Ahithophel is among the conspirators with Absalom.” David said, “LORD, please turn the counsel of Ahithophel into foolishness.”
- American Standard Version (ASV)
- And one told David, saying, Ahithophel is among the conspirators with Absalom. And David said, O Jehovah, I pray thee, turn the counsel of Ahithophel into foolishness.
- Bible in Basic English (BBE)
- And word came to David, saying, Ahithophel is among those who are joined to Absalom. And David said, O Lord, let the wisdom of Ahithophel be made foolish.
- Darby Translation (DBY)
- And one told David saying, Ahithophel is among the conspirators with Absalom. Then said David, Jehovah, I pray thee, turn the counsel of Ahithophel into foolishness.
- Webster's Bible (WBS)
- And [one] told David, saying, Ahithophel [is] among the conspirators with Absalom. And David said, O LORD, I pray thee, turn the counsel of Ahithophel into foolishness.
- Young's Literal Translation (YLT)
- and David declared, saying, 'Ahithophel [is] among the conspirators with Absalom;' and David saith, 'Make foolish, I pray Thee, the counsel of Ahithophel, O Jehovah.'
Read in context
- 29அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்.
- 30தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.
- 31அப்சலோமோடே கட்டுப்பாடுபண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்.
- 32தாவீது மலையின் உச்சிமட்டும்வந்து, அங்கே தேவனைப் பணிந்து கொண்டபோது, இதோ, அற்கியனாகிய ஊசாய் தன் வஸ்திரத்தைக் கிழித்துக்கொண்டு, தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவனாய் அவனுக்கு எதிர்ப்பட்டான்.
- 33தாவீது அவனைப் பார்த்து: நீ என்னோடேகூட நடந்துவந்தால் எனக்குப் பாரமாயிருப்பாய்.
Cross references
- 2 Samuel 17:14 2 சாமுவேல் 17:14அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்; இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும் பொருட்டு, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக்கர்த்தர் கட்டளையிட்டார்.
- 2 Samuel 17:23 2 சாமுவேல் 17:23அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.
- Psalm 41:9 சங்கீதம் 41:9என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
- James 3:15 யாக்கோபு 3:15இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லெளகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.
- Job 5:12 யோபு 5:12தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.
- 1 Corinthians 3:18–20 1 கொரிந்தியர் 3:18–20ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன். இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.
- 1 Corinthians 1:20 1 கொரிந்தியர் 1:20ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தைத் தேவன் பைத்தியமாக்கவில்லையா?
- Job 12:16–20 யோபு 12:16–20அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம் போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள். அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார். அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார். அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார். அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையை வாங்கிப் போடுகிறார்.
- 2 Samuel 15:12 2 சாமுவேல் 15:12அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில்திரளாய் வந்து கூடினார்கள்.
- 2 Samuel 16:23 2 சாமுவேல் 16:23அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது; அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.
- Isaiah 19:11–25 ஏசாயா 19:11–25சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்? அவர்கள் எங்கே? உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் கர்த்தர் எகிப்தைக்குறித்துப் பண்ணின யோசனையை அவர்கள் உனக்குத் தெரிவிக்கட்டும்; அல்லது தாங்களே அறிந்துகொள்ளட்டும். சோவான் பிரபுக்கள் மூடரானார்கள்; தோப்பின் பிரபுக்கள் மோசம் போனார்கள்; எகிப்தையும் அதின் கோத்திரத்தலைவரையும் வழிதப்பப்பண்ணுகிறார்கள். கர்த்தர் அதின் நடுவில் தாறுமாறுகளின் ஆவியை வரப்பண்ணினார்; ஆனதுகொண்டு வெறியன் வாந்திபண்ணி, தள்ளாடித் திரிகிறதுபோல, அவர்கள் எகிப்தை அதின் எல்லாச்செய்கையிலும் தள்ளாடித் திரியப்பண்ணுகிறார்கள். எகிப்தில் தலையாகிலும் வாலாகிலும் கிளையாகிலும் நாணலாகிலும் செய்யும் வேலை ஒன்றுமிராது. அக்காலத்திலே எகிப்தியர் பெண்டுகளைப்போலிருந்து சேனைகளின் கர்த்தர் தங்கள்மேல் அசைக்கும் கையசைவினாலே அஞ்சி நடுங்குவார்கள். சேனைகளின் கர்த்தர் அவர்களுக்கு விரோதமாக நிர்ணயித்துக்கொண்ட ஆலோசனையினிமித்தம் யூதாவின் தேசம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருக்கும்; தனக்குள் அதை நினைக்கிறவனெவனும் திடுக்கிடுவான். அக்காலத்திலே எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் பாஷையைப் பேசி, சேனைகளின் கர்த்தரை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று நிர்மூலமான பட்டணம் என்னப்படும். அக்காலத்திலே எகிப்துதேசத்தின் நடுவிலே கர்த்தருக்கு ஒரு பலிபீடமும், அதின் எல்லையருகே கர்த்தருக்கு ஒரு ஸ்தம்பமும் உண்டாயிருக்கும். அது எகிப்து தேசத்திலே சேனைகளின் கர்த்தருக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினிமித்தம் அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்பொழுது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார். அப்பொழுது கர்த்தர் எகிப்தியருக்கு அறியப்படுவார்; எகிப்தியர் கர்த்தரை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும் காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து, கர்த்தருக்குப் பொருத்தனைகளைப்பண்ணி அவைகளைச் செலுத்துவார்கள். கர்த்தர் எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்துக் குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார். அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிறபெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர் அசீரியரோடுங்கூட ஆராதனை செய்வார்கள். அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாகப் பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும். அவர்களைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர்: எகிப்தியராகிய என் ஜனமும், அசீரியராகிய என் கரத்தின் கிரியையும், இஸ்ரவேலராகிய என் சுதந்தரமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
- John 13:18 யோவான் 13:18உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
Original words (Hebrew)
- told · H5046נָגַד nâgad
- David · H1732דָּוִד Dâvid
- saying · H559אָמַר ʼâmar
- Ahithophel · H302אֲחִיתֹפֶל ʼĂchîythôphel
- conspirators · H7194קָשַׁר qâshar
- Absalom · H53אֲבִישָׁלוֹם ʼĂbîyshâlôwm
- David · H1732דָּוִד Dâvid
- said · H559אָמַר ʼâmar
- counsel · H6098עֵצָה ʻêtsâh
- Ahithophel · H302אֲחִיתֹפֶל ʼĂchîythôphel
- foolishness · H5528סָכַל çâkal
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.