2 Samuel 19:1 in Tamil
இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
Itho, raajaa apsalomukkaaga azhuthu pulambugiraar endru yovaabukku arivikkappattathu.
2 Samuel 19:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதோ, ராஜா அப்சலோமிற்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- “தாவீது அரசன் அப்சலோமுக்காக அழுது துக்கம்கொண்டாடுகிறான்” என யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
- Tamil Easy Reading Version
- ஜனங்கள் யோவாபுக்குச் செய்தியைத் தெரிவித்தனர். அவர்கள் யோவாபை நோக்கி, “பாருங்கள் அரசர் அப்சலோமுக்காக மிகவும் அழுது துக்கமாய் இருக்கிறார்” என்றார்கள்.
2 Samuel 19:1 in English
- King James Version (KJV)
- And it was told Joab, Behold, the king weepeth and mourneth for Absalom.
- World English Bible (WEB)
- Joab was told, “Behold, the king weeps and mourns for Absalom.”
- American Standard Version (ASV)
- And it was told Joab, Behold, the king weepeth and mourneth for Absalom.
- Bible in Basic English (BBE)
- And word was given to Joab that the king was weeping and sorrowing for Absalom.
- Darby Translation (DBY)
- And it was told Joab, Behold, the king weeps and mourns for Absalom.
- Webster's Bible (WBS)
- And it was told to Joab, Behold, the king weepeth and mourneth for Absalom.
- Young's Literal Translation (YLT)
- And it is declared to Joab, 'Lo, the king is weeping and mourning for Absalom;'
Read in context
- 1இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
- 2ராஜா தம்முடைய குமாரனுக்காகமனம்நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்த ஜெயம் ஜனத்திற்கெல்லாம் துக்கமாய்மாறிற்று.
- 3யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால்வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.
Cross references
- 2 Samuel 18:5 2 சாமுவேல் 18:5ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக் குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள்.
- 2 Samuel 18:14 2 சாமுவேல் 18:14ஆதலால் யோவாப்: நான் இப்படி உன்னோடே பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன் கையிலே மூன்றுவல்லயங்களை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலிமரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில், அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான்.
- 2 Samuel 18:20 2 சாமுவேல் 18:20யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக்கூடாது; இன்னொருநாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடியினால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோக வேண்டாம் என்று சொல்லி,
- 2 Samuel 18:12 2 சாமுவேல் 18:12அந்த மனுஷன் யோவாபை நோக்கி: என் கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய குமாரன்மேல் என் கையை நீட்டமாட்டேன்; பிள்ளையாண்டானாகிய அப்சலோமை நீங்கள் அவரவர் காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள் கேட்கக் கட்டளையிட்டாரே.
- 2 Samuel 18:33 2 சாமுவேல் 18:33அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே நான் உனக்குப்பதிலாகச் செத்தேனானால்நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே என்று சொல்லி அழுதான்.
- Proverbs 17:25 நீதிமொழிகள் 17:25மூடபுத்திரன் தன் பிதாவுக்குச்சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.