2 Samuel 19:39 in Tamil
ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ, தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.
Janangal ellaarum yorthaanaik kadanthabothu, raajaa parsilaavai muththamittu avanai aaseervathiththu, thaanum kadanthubonaan; avano, thannidaththirkuth thirumbippoyvittaan.
2 Samuel 19:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மக்கள் எல்லோரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாயியை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னுடைய இடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.
- Open Tamil Contemporary Version
- மக்கள் அனைவரும் யோர்தானைக் கடந்தபின் அரசனும் கடந்தான். அரசன் பர்சிலாயை முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பர்சிலாய் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்.
- Tamil Easy Reading Version
- அரசன் பர்சிலாவை முத்தமிட்டு வாழ்த்தினான். பர்சிலா வீட்டிற்குத் திரும்பிப் போனான். அரசனும் அவனது ஜனங்கள் எல்லோரும் நதியைக் கடந்தனர்.
2 Samuel 19:39 in English
- King James Version (KJV)
- And all the people went over Jordan. And when the king was come over, the king kissed Barzillai, and blessed him; and he returned unto his own place.
- World English Bible (WEB)
- All the people went over the Jordan, and the king went over. Then the king kissed Barzillai and blessed him; and he returned to his own place.
- American Standard Version (ASV)
- And all the people went over the Jordan, and the king went over: and the king kissed Barzillai, and blessed him; and he returned unto his own place.
- Bible in Basic English (BBE)
- Then all the people went over Jordan, and the king went over: and the king gave Barzillai a kiss, with his blessing; and he went back to his place.
- Darby Translation (DBY)
- And all the people went over the Jordan; and the king went over; and the king kissed Barzillai, and blessed him; and he returned to his own place.
- Webster's Bible (WBS)
- And all the people went over Jordan. And when the king had come over, the king kissed Barzillai, and blessed him; and he returned to his own place.
- Young's Literal Translation (YLT)
- And all the people pass over the Jordan, and the king hath passed over, and the king giveth a kiss to Barzillai, and blesseth him, and he turneth back to his place.
Read in context
- 37நான் என் ஊரிலே மரித்து, என் தாய் தகப்பன்மார் கல்லறையிலே அடக்கம்பண்ணப்படும்படிக்கு, உமது அடியான் திரும்பிப்போகட்டும்; ஆனாலும், இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூடவருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.
- 38அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடேகூட வரட்டும்; உன் பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு நடப்பித்து, நீ என்னிடத்தில் வேண்டிக்கொள் வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.
- 39ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ, தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.
- 40ராஜா கடந்து, கில்கால்மட்டும்போனான்; கிம்காம் அவனோடேகூடக்கடந்துவந்தான்; யூதா ஜனம் அனைத்தும், இஸ்ரவேலில் பாதிஜனமும், ராஜாவை இக்கரைப்படுத்தி வந்தபின்பு,
- 41இதோ, இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவை நோக்கி: எங்கள் சகோதரராகிய யூதா மனுஷர் திருட்டளவாய் உம்மை அழைத்துவந்து, ராஜாவையும் அவர் வீட்டாரையும், அவரோடேகூட இருக்கிற தாவீதின் மனுஷர் அனைவரையும், யோர்தானைக் கடக்கப்பண்ணினது என்ன என்றார்கள்.
Cross references
- Genesis 31:55 ஆதியாகமம் 31:55லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பிப்போனான்.
- Ruth 1:14 ரூத் 1:14அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்; ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்.
- Genesis 47:7 ஆதியாகமம் 47:7பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.
- Genesis 14:19 ஆதியாகமம் 14:19அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.
- 2 Samuel 14:33 2 சாமுவேல் 14:33யோவாப் ராஜாவினிடத்தில் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமை அழைப்பித்தான்; அவன் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.
- Genesis 45:15 ஆதியாகமம் 45:15பின்பு தன் சகோதரர் யாவரையும் முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள்.
- Genesis 47:10 ஆதியாகமம் 47:10பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப்போனான்.
- Luke 2:34 லூக்கா 2:34பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
- 1 Samuel 24:22 1 சாமுவேல் 24:22அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.
- Genesis 28:3 ஆதியாகமம் 28:3சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி;
- 2 Samuel 6:18 2 சாமுவேல் 6:18தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களை ஆசீர்வதித்து,
- 1 Thessalonians 5:26 1 தெசலோனிக்கேயர் 5:26சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.