Acts 5:6 in Tamil
வாலிபர் எழுந்து, அவனைச் சேலையில்சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள்.
Vaalibar ezhunthu, avanais saelaiyilsutri, veliyae eduththukkonduboy, adakkambanninaarkal.
Acts 5:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வாலிபர்கள் எழுந்து, அவனைத் துணியில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது இளைஞர் முன்வந்து, அவனது உடலைத் துணியில் சுற்றி, தூக்கிக்கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள்.
Acts 5:6 in English
- King James Version (KJV)
- And the young men arose, wound him up, and carried [him] out, and buried [him].
- World English Bible (WEB)
- The young men arose and wrapped him up, and they carried him out and buried him.
- American Standard Version (ASV)
- And the young men arose and wrapped him round, and they carried him out and buried him.
- Bible in Basic English (BBE)
- And the young men went and made ready his body, and took it out, and put it in the earth.
- Darby Translation (DBY)
- And the young men, rising up, swathed him up for burial, and having carried him out, buried him.
- Webster's Bible (WBS)
- And the young men arose, wound him up, and carried [him] out, and buried [him] .
- Young's Literal Translation (YLT)
- and having risen, the younger men wound him up, and having carried forth, they buried [him].
Read in context
- 4அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதைவிற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
- 5அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.
- 6வாலிபர் எழுந்து, அவனைச் சேலையில்சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள்.
- 7ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
- 8பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ் வளவுக்குத்தான் என்றாள்.
Cross references
- John 19:40 யோவான் 19:40அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகர்ந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.
- 2 Samuel 18:17 2 சாமுவேல் 18:17அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
- Deuteronomy 21:23 உபாகமம் 21:23இரவிலே அவன் பிரேதம் மரத்திலேதொங்கலாகாது; அந்நாளில்தானே அதை அடக்கம்பண்ணவேண்டும், தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன், ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.
- Leviticus 10:4–6 லேவியராகமம் 10:4–6பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் குமாரனாகியமீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்டவந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளையத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான். மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளையத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள். மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்ககாகப் புலம்புவார்களாக.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.