Ecclesiastes 1:14 in Tamil
சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
Sooriyanukkuk keezhae seyyappadugira kaariyangalaiyellaam kavaniththup paarththaen; itho, ellaam maayaiyum, manathukkus sanjsalamumaayirukkirathu.
Ecclesiastes 1:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், காற்றை பிடிக்கிறதைப் போல் இருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லா செயல்களையும் நான் பார்த்திருக்கிறேன்; அவை அனைத்தும் அர்த்தமற்றவை, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே.
- Tamil Easy Reading Version
- பூமியின்மேல் செய்யப்படுகிற அனைத்து செயல்களையும் நான் பார்த்தேன். அவை அனைத்தும் காலத்தை வீணாக்கும் காரியம் என்பதையும் அறிந்துகொண்டேன். இது காற்றைப் பிடிப்பது போன்றதாகும்.
Ecclesiastes 1:14 in English
- King James Version (KJV)
- I have seen all the works that are done under the sun; and, behold, all [is] vanity and vexation of spirit.
- World English Bible (WEB)
- I have seen all the works that are done under the sun; and behold, all is vanity and a chasing after wind.
- American Standard Version (ASV)
- I have seen all the works that are done under the sun; and, behold, all is vanity and a striving after wind.
- Bible in Basic English (BBE)
- I have seen all the works which are done under the sun; all is to no purpose, and desire for wind.
- Darby Translation (DBY)
- I have seen all the works that are done under the sun, and behold, all is vanity and pursuit of the wind.
- Webster's Bible (WBS)
- I have seen all the works that are done under the sun; and behold, all [is] vanity and vexation of spirit.
- Young's Literal Translation (YLT)
- I have seen all the works that have been done under the sun, and lo, the whole [is] vanity and vexation of spirit!
Read in context
- 12பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலருக்கு ராஜாவாயிருந்தேன்.
- 13வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம்ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்குத் தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.
- 14சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
- 15கோணலானதை நேராக்கக்கூடாது; குறைவானதை எண்ணிமுடியாது.
- 16இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன்.
Cross references
- Ecclesiastes 2:11 பிரசங்கி 2:11என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.
- Ecclesiastes 2:26 பிரசங்கி 2:26தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச்சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
- Ecclesiastes 2:17 பிரசங்கி 2:17ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது; எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
- Ecclesiastes 6:9 பிரசங்கி 6:9ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.
- Ecclesiastes 1:17–18 பிரசங்கி 1:17–18ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன். அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்.
- Psalm 39:5–6 சங்கீதம் 39:5–6இதோ, என் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது, எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.) வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதைவாரிக்கொள்ளுவான் என்று அறியான்.
- Ecclesiastes 4:4 பிரசங்கி 4:4மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
- 1 Kings 4:30–32 1 இராஜாக்கள் 4:30–32சகல கிழக்கத்திப் புத்திரரின்ஞானத்தையும் எகிப்தியரின் சகலஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது. அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது. அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.