Ezekiel 23:7 in Tamil
அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள்.
Aseeriyarin puththiraril siraeshdamaana anaivarodum, thaan mogiththa anaivarodum than vaesiththanangalai nadappiththu, avarkaludaiya naragalaana sagala vikkiragangalaalum theettuppattupponaal.
Ezekiel 23:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அசீரியர்களில் தலைசிறந்தவர்களான அனைவரோடும், தான் ஆசைவைத்த அனைவரோடும் தன்னுடைய விபசாரத்தை நடப்பித்து, அவர்களுடைய அசுத்தமான எல்லா சிலைகளாலும் தீட்டுப்பட்டுப்போனாள்.
- Open Tamil Contemporary Version
- அசீரிய உயர்குடி மக்கள் அனைவரோடும் அவள் விபசாரம் பண்ணினாள். அவள் மோகங்கொண்ட அனைவரது விக்கிரகங்களையும் வழிபட்டு தன்னை கறைப்படுத்தினாள்.
- Tamil Easy Reading Version
- அகோலாள் அவர்கள் அனைவருக்கும் தன்னையே கொடுத்தாள். அவர்கள் அனைவரும் அசீரியப் படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள். அவள் அவர்கள் அனைவரையும் விரும்பினாள். அவள் அவர்களது தீட்டான சிலைகளோடு சேர்ந்து தீட்டானாள்.
Ezekiel 23:7 in English
- King James Version (KJV)
- Thus she committed her whoredoms with them, with all them [that were] the chosen men of Assyria, and with all on whom she doted: with all their idols she defiled herself.
- World English Bible (WEB)
- She gave herself as a prostitute to them, all of them the choicest men of Assyria. She defiled herself with the idols of whomever she lusted after.
- American Standard Version (ASV)
- And she bestowed her whoredoms upon them, the choicest men of Assyria all of them; and on whomsoever she doted, with all their idols she defiled herself.
- Bible in Basic English (BBE)
- And she gave her unclean love to them, all of them the noblest men of Assyria: and she made herself unclean with the images of all who were desired by her.
- Darby Translation (DBY)
- And she bestowed her whoredoms upon them, all of them the choice of the children of Asshur; and with all after whom she lusted, with all their idols she defiled herself.
- Webster's Bible (WBS)
- Thus she committed her lewd deeds with them, with all them [that were] the chosen men of Assyria, and with all on whom she doted: with all their idols she defiled herself.
- Young's Literal Translation (YLT)
- And she giveth her whoredoms on them, The choice of the sons of Asshur, All of them — even all on whom she doted, By all their idols she hath been defiled.
Read in context
- 5அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள்.
- 6நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், செளந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்தசமீபதேசத்தாராகிய அசீரியரென்கிறதன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து,
- 7அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள்.
- 8தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்.
- 9ஆகையால் அவளுடைய சிநேகிதரின் கையிலே, அவள் மோகித்திருந்த அசீரிய புத்திரரின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன்.
Cross references
- Hosea 5:3 ஓசியா 5:3எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ சோரம்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே.
- Hosea 6:10 ஓசியா 6:10பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று.
- Ezekiel 20:7 எசேக்கியேல் 20:7உங்களில் அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிவிட்டு, எகிப்தின் நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அவர்களோடே சொன்னேன்.
- Ezekiel 22:3–4 எசேக்கியேல் 22:3–4அதை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் காலம் வரத்தக்கதாக உன் நடுவிலே இரத்தஞ்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாய் நரகலான விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறதுமான நகரமே, நீ சிந்தின உன் இரத்தத்தினால் நீகுற்றஞ்சுமந்ததாகி, நீ உண்டுபண்ணின உன் நரகலான விக்கிரகங்களால் நீ தீட்டுப்பட்டு, உன் நாட்களைச் சமீபிக்கப்பண்ணி, உன் வருஷங்களை நிறைவேற்றினாய்; ஆகையால் நான் உன்னைப் புறஜாதிகளுக்கு நிந்தையாகவும், தேசங்களுக்கெல்லாம் பரியாசமாகவும் வைப்பேன்.
- Psalm 106:39 சங்கீதம் 106:39அவர்கள் தங்கள் கிரியைகளினால் அசுத்தமாகி, தங்கள் செய்கைகளினால் சோரம்போனார்கள்.
- Genesis 10:22 ஆதியாகமம் 10:22சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
- Ezekiel 16:15 எசேக்கியேல் 16:15நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து, வழிப்போக்கரில் உனக்கு நேர் பட்ட யாவரோடும் வேசித்தனம்பண்ணி,
- Ezekiel 23:30 எசேக்கியேல் 23:30நீ புறஜாதிகளைப்பின் தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.