Isaiah 7:18 in Tamil
அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும்தேனீயையும் பயில்காட்டி அழைப்பார்.
Annaadkalilae, karththar egipthu nathigalin kadaiyaantharaththilulla eeyaiyum, aseeriyaathaesaththilirukkumthaeneeyaiyum payilkaatti azhaippaar.
Isaiah 7:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்நாட்களிலே, யெகோவா எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியா தேசத்திலிருக்கும் தேனீயையும் சைகைகாட்டி அழைப்பார்.
- Open Tamil Contemporary Version
- அந்த நாளிலே யெகோவா அதிக தூரத்திலுள்ள எகிப்திய நீரோடைகளிலிருந்து ஈக்களையும், அசீரிய நாட்டிலிருந்து தேனீக்களையும் கூவி அழைப்பார்.
- Tamil Easy Reading Version
- “அப்பொழுது, கர்த்தர் ‘ஈயை’ அழைப்பார். (அந்த ‘ஈக்கள்’ இப்போது எகிப்து ஓடைக் கரைகளில் உள்ளன). கர்த்தர் ‘தேனீக்களை’ அழைப்பார். (இந்த தேனீக்கள் இப்பொழுது அசீரியா நாட்டிலுள்ளன). இந்தப் பகைவர்கள் உன் நாட்டிற்குள் வருவார்கள்.
Isaiah 7:18 in English
- King James Version (KJV)
- And it shall come to pass in that day, [that] the LORD shall hiss for the fly that [is] in the uttermost part of the rivers of Egypt, and for the bee that [is] in the land of Assyria.
- World English Bible (WEB)
- It will happen in that day that the LORD will whistle for the fly that is in the uttermost part of the rivers of Egypt, and for the bee that is in the land of Assyria.
- American Standard Version (ASV)
- And it shall come to pass in that day, that Jehovah will hiss for the fly that is in the uttermost part of the rivers of Egypt, and for the bee that is in the land of Assyria.
- Bible in Basic English (BBE)
- And it will be in that day that the Lord will make a piping sound for the fly which is in the end of the rivers of Egypt, and for the bee which is in the land of Assyria.
- Darby Translation (DBY)
- And it shall come to pass in that day, that Jehovah will hiss for the fly which is at the extremity of the streams of Egypt, and for the bee which is in the land of Assyria;
- Webster's Bible (WBS)
- And it shall come to pass in that day, [that] the LORD will hiss for the fly that [is] in the uttermost part of the rivers of Egypt, and for the bee that [is] in the land of Assyria.
- Young's Literal Translation (YLT)
- And it hath come to pass, in that day, Jehovah doth hiss for a fly that [is] in the extremity of the brooks of Egypt, And for a bee that [is] in the land of Asshur.
Read in context
- 16அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.
- 17எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின் மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின் மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார்.
- 18அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியாதேசத்திலிருக்கும்தேனீயையும் பயில்காட்டி அழைப்பார்.
- 19அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும்.
- 20அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் வாங்கிப்போடுவிப்பார்.
Cross references
- Isaiah 5:26 ஏசாயா 5:26அவர் தூரத்திலுள்ள ஜாதியாருக்கு ஒரு கொடியை ஏற்றி, அவர்களைப் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து பயில்காட்டி அழைப்பார்; அப்பொழுது அவர்கள் தீவிரமும்வேகமுமாய் வருவார்கள்.
- Deuteronomy 1:44 உபாகமம் 1:44அந்த மலையிலே குடியிருந்த எமோரியர் உங்களை எதிர்க்கும்படி புறப்பட்டு வந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி, உங்களைச் சேயீர் தொடங்கி ஓர்மாமட்டும் முறிய அடித்தார்கள்.
- Joshua 24:12 யோசுவா 24:12எமோரியரின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்கள் வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னின்று துரத்திவிட்டது.
- Isaiah 31:1 ஏசாயா 31:1சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப் போய், குதிரைகள்மேல் நம்பிக்கை வைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!
- Deuteronomy 7:20 உபாகமம் 7:20மீதியாயிருந்து உனக்குத் தப்பி ஒளித்துக்கொள்ளுகிறவர்களும் அழிந்து போகுமட்டும் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குள்ளே குளவிகளை அனுப்புவார்.
- Isaiah 13:5 ஏசாயா 13:5கர்த்தர் வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது.
- 2 Kings 23:33–34 2 இராஜாக்கள் 23:33–34அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக் கட்டுவித்து, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தி, யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக வைத்து, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திலே போய் அங்கே மரணமடைந்தான்.
- Isaiah 7:17 ஏசாயா 7:17எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின் மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின் மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார்.
- Psalm 118:12 சங்கீதம் 118:12தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
- Exodus 8:21 யாத்திராகமம் 8:21என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன்மேலும் உன் ஊழியக்காரர் மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.
- Exodus 8:24 யாத்திராகமம் 8:24அப்படியே கர்த்தர் செய்தார்; மகா திரளான வண்டு ஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போயிற்று.
- Isaiah 30:1–2 ஏசாயா 30:1–2பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனை பண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும், என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.