Jeremiah 20:17 in Tamil
என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூலுமாய் இருக்கத்தக்கதாகக்கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன?
En thaayaar enakkup piraethakkuzhiyum, naan endraikkum pirasaviyaatha soolumaay irukkaththakkathaagakkarppaththilae naan kolaiseyyappadaamarponathenna?
Jeremiah 20:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத கர்ப்பமாக இருப்பதற்காக கர்ப்பத்தில் நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன?
- Open Tamil Contemporary Version
- ஏனெனில் அவன் என்னைக் கருப்பையிலேயே கொல்லாமற்போனானே. அப்பொழுது என் தாயின் கருப்பை என் கல்லறையாய் இருந்திருக்குமே.
- Tamil Easy Reading Version
- ஏனென்றால், நான் எனது தாயின் கருவில் இருக்கும்போது அம்மனிதன் என்னைக் கொல்லவில்லை. அந்த நேரத்தில் அவன் என்னைக் கொன்றிருந்தால் என் தாயின் கர்ப்பப்பையே கல்லறை ஆகியிருக்கும். நான் பிறந்திருக்கவேமாட்டேன்.
Jeremiah 20:17 in English
- King James Version (KJV)
- Because he slew me not from the womb; or that my mother might have been my grave, and her womb [to be] always great [with me].
- World English Bible (WEB)
- because he didn’t kill me from the womb. So my mother would have been my grave, and her womb always great.
- American Standard Version (ASV)
- because he slew me not from the womb; and so my mother would have been my grave, and her womb always great.
- Bible in Basic English (BBE)
- Because he did not put me to death before my birth took place: so my mother's body would have been my last resting-place, and she would have been with child for ever.
- Darby Translation (DBY)
- because he slew me not from the womb. Or would that my mother had been my grave, and her womb always great [with me]!
- Webster's Bible (WBS)
- Because he slew me not at my birth; or that my mother might have been my grave, and she had not been delivered.
- Young's Literal Translation (YLT)
- Because he hath not put me to death from the womb, And my mother is to me — my grave, And her womb a pregnancy age-during.
Read in context
- 15உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து, அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்.
- 16அந்த மனுஷன், கர்த்தர் மனம் மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலமே அலறுதலையும் மத்தியான வேளையிலே கூக்குரலையும் கேட்கக்கடவன்.
- 17என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூலுமாய் இருக்கத்தக்கதாகக்கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன?
- 18நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?
Cross references
- Job 10:18–19 யோபு 10:18–19நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்துபுறப்படப்பண்ணினது என்ன? ஓரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே. நான் ஒருக்காலும் இல்லாததுபோலிருந்து, கர்ப்பத்திலிருந்து பிரேதக்குழிக்குக் கொண்டுபோகப்பட்டிருப்பேன்.
- Job 3:10–11 யோபு 3:10–11நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே. நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன?
- Job 3:16 யோபு 3:16அல்லது, வெளிப்படாத முதிராப் பிண்டம்போலவும், வெளிச்சத்தைக் காணாத சிசுக்கள் போலவும் இருப்பேனே.
- Ecclesiastes 6:3 பிரசங்கி 6:3ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம்வாசி என்கிறேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.