Job 14:2 in Tamil
அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.
Avan poovaippolap pooththu aruppungiraan; nizhalaippola nilainirkaamal odippogiraan.
Job 14:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் பூவைப்போலப் பூத்துமறைந்து போகிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.
- Open Tamil Contemporary Version
- அவன் ஒரு பூவைப்போல் பூத்து வாடிப்போகிறான்; அவன் நிழலைப்போல் நிலையற்று மறைந்துபோகிறான்.
- Tamil Easy Reading Version
- மனிதனின் வாழ்க்கை ஒரு மலரைப் போன்றது. அவன் விரைவாக வளருகிறான், பின்பு மடிந்துப் போகிறான். மனிதனின் வாழ்க்கை ஒரு நிழலைப் போன்றது. அது குறுகிய காலம் இருந்து, பின்பு மறைந்துப்போகும்.
Job 14:2 in English
- King James Version (KJV)
- He cometh forth like a flower, and is cut down: he fleeth also as a shadow, and continueth not.
- World English Bible (WEB)
- He grows up like a flower, and is cut down. He also flees like a shadow, and doesn’t continue.
- American Standard Version (ASV)
- He cometh forth like a flower, and is cut down: He fleeth also as a shadow, and continueth not.
- Bible in Basic English (BBE)
- He comes out like a flower, and is cut down: he goes in flight like a shade, and is never seen again.
- Darby Translation (DBY)
- He cometh forth like a flower, and is cut down; and he fleeth as a shadow, and continueth not.
- Webster's Bible (WBS)
- He cometh forth like a flower, and is cut down: he fleeth also as a shadow, and continueth not.
- Young's Literal Translation (YLT)
- As a flower he hath gone forth, and is cut off, And he fleeth as a shadow and standeth not.
Read in context
- 1ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.
- 2அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.
- 3ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்து வைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ?
- 4அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஓருவனுமில்லை.
Cross references
- Isaiah 40:6–8 ஏசாயா 40:6–8பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. கர்த்தரின் ஆவி அதின் மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல். புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது.
- 1 Peter 1:24 1 பேதுரு 1:24மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பவூம் உதிர்ந்தது.
- Job 8:9 யோபு 8:9நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.
- Psalm 103:15–16 சங்கீதம் 103:15–16மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
- James 4:14 யாக்கோபு 4:14நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்புதோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.
- 1 Chronicles 29:15 1 நாளாகமம் 29:15உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.
- James 1:10–11 யாக்கோபு 1:10–11ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான். சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.
- Psalm 144:4 சங்கீதம் 144:4மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.
- Psalm 102:11 சங்கீதம் 102:11என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.
- Psalm 92:12 சங்கீதம் 92:12நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
- Ecclesiastes 8:13 பிரசங்கி 8:13துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.
- Job 9:25–26 யோபு 9:25–26என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்து போம். அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்து போகிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.