Job 3:1 in Tamil
அதற்குப்பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
Atharkuppinpu yobu than vaayaiththiranthu, thaan pirantha naalais sabiththu,
Job 3:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
- Open Tamil Contemporary Version
- அதற்குப்பின் யோபு தன் வாயைத் திறந்து தன் பிறந்த நாளைச் சபித்தான்,
- Tamil Easy Reading Version
- பின்பு யோபு தன் வாயைத் திறந்து தான் பிறந்த நாளை சபித்தான்.
Job 3:1 in English
- King James Version (KJV)
- After this opened Job his mouth, and cursed his day.
- World English Bible (WEB)
- After this Job opened his mouth, and cursed the day of his birth.
- American Standard Version (ASV)
- After this opened Job his mouth, and cursed his day.
- Bible in Basic English (BBE)
- Then, opening his mouth, and cursing the day of his birth,
- Darby Translation (DBY)
- After this, Job opened his mouth and cursed his day.
- Webster's Bible (WBS)
- After this Job opened his mouth, and cursed his day.
- Young's Literal Translation (YLT)
- After this hath Job opened his mouth, and revileth his day.
Read in context
- 1அதற்குப்பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
- 2வசனித்துச் சொன்னது என்னவென்றால்:
- 3நான் பிறந்தநாளும் ஒருஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக.
Cross references
- Jeremiah 20:14–15 எரேமியா 20:14–15நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக. உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து, அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்.
- Psalm 106:33 சங்கீதம் 106:33அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்.
- Psalm 39:2–3 சங்கீதம் 39:2–3நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது; என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்.
- Job 2:9–10 யோபு 2:9–10அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.
- Job 35:16 யோபு 35:16ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாமல் வார்த்தைகளை மிகுதியாய் வசனிக்கிறார் என்றான்.
- Job 1:22 யோபு 1:22இவையெல்லாவற்றிலும் யோபுபாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.
- Job 3:3 யோபு 3:3நான் பிறந்தநாளும் ஒருஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக.
- Job 2:5 யோபு 2:5ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.