Job 3 in Tamil
யோபு 3
- 1
அதற்குப்பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
After this opened Job his mouth, and cursed his day.
- 2
வசனித்துச் சொன்னது என்னவென்றால்:
And Job spake, and said,
- 3
நான் பிறந்தநாளும் ஒருஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக.
Let the day perish wherein I was born, and the night [in which] it was said, There is a man child conceived.
- 4
அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின் மேல் பிரகாசியாமலும்,
Let that day be darkness; let not God regard it from above, neither let the light shine upon it.
- 5
அந்தகாரமும் மரணஇருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக.
Let darkness and the shadow of death stain it; let a cloud dwell upon it; let the blackness of the day terrify it.
- 6
அந்த ராத்திரியை அந்தகாரம் பிடிப்பதாக; வருஷத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாயிராமலும் மாதங்களின் கணக்கிலே அது வராமலும் போவதாக.
As [for] that night, let darkness seize upon it; let it not be joined unto the days of the year, let it not come into the number of the months.
- 7
அந்த ராத்திரி தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.
Lo, let that night be solitary, let no joyful voice come therein.
- 8
நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக.
Let them curse it that curse the day, who are ready to raise up their mourning.
- 9
அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக.
Let the stars of the twilight thereof be dark; let it look for light, but [have] none; neither let it see the dawning of the day:
- 10
நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.
Because it shut not up the doors of my [mother’s] womb, nor hid sorrow from mine eyes.
- 11
நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன?
Why died I not from the womb? [why] did I [not] give up the ghost when I came out of the belly?
- 12
என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண ஸ்தனங்களும் உண்டாயிருந்ததென்ன?
Why did the knees prevent me? or why the breasts that I should suck?
- 13
அப்படியில்லாதிருந்தால், அசையாமல் கிடந்து அமர்ந்திருந்து,
For now should I have lain still and been quiet, I should have slept: then had I been at rest,
- 14
பாழ்நிலங்களில் தங்களுக்குமாளிகையைக்கட்டின பூமியின் ராஜாக்களோடும் மந்திரிமார்களோடும்,
With kings and counsellors of the earth, which built desolate places for themselves;
- 15
அல்லது, பொன்னை உடையவர்களும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமானபிரபுக்களோடுங்கூட நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.
Or with princes that had gold, who filled their houses with silver:
- 16
அல்லது, வெளிப்படாத முதிராப் பிண்டம்போலவும், வெளிச்சத்தைக் காணாத சிசுக்கள் போலவும் இருப்பேனே.
Or as an hidden untimely birth I had not been; as infants [which] never saw light.
- 17
துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்றுவிடாய்த்துப்போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.
There the wicked cease [from] troubling; and there the weary be at rest.
- 18
கட்டுண்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமைந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடையசத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.
[There] the prisoners rest together; they hear not the voice of the oppressor.
- 19
சிறியவனும் பெரியவனும் அங்கேசரியாயிருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.
The small and great are there; and the servant [is] free from his master.
- 20
மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
Wherefore is light given to him that is in misery, and life unto the bitter [in] soul;
- 21
பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து,
Which long for death, but it [cometh] not; and dig for it more than for hid treasures;
- 22
அதற்காகச் சந்தோஷப்படுகிறநிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
Which rejoice exceedingly, [and] are glad, when they can find the grave?
- 23
தன் வழியைக் காணக்கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?
[Why is light given] to a man whose way is hid, and whom God hath hedged in?
- 24
என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது.
For my sighing cometh before I eat, and my roarings are poured out like the waters.
- 25
நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.
For the thing which I greatly feared is come upon me, and that which I was afraid of is come unto me.
- 26
எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.
I was not in safety, neither had I rest, neither was I quiet; yet trouble came.