Job 33:25 in Tamil
அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயதுநாட்களுக்குத் திரும்புவான்.
Appozhuthu avan maamsam vaalibaththil irunthathaippaarkkilum aarokkiyamadaiyum; than vaalavayathunaadkalukkuth thirumbuvaan.
Job 33:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவனுடைய உடல் வாலிபத்தில் இருந்ததைவிட ஆரோக்கியமடையும்; தன் இளவயது நாட்களுக்குத் திரும்புவான்.
- Open Tamil Contemporary Version
- அவர்களின் உடல் குழந்தையின் உடலைப்போல் புதிதாகும், அவர்கள் வாலிப நாட்களில் இருந்ததுபோல் மாற்றப்படுவார்கள்.
- Tamil Easy Reading Version
- அப்போது அம்மனிதனின் உடல் மீண்டும் இளமையும், வலிமையும் பெறும். அவன் இளமையிலிருந்தாற்போன்று இருப்பான்.
Job 33:25 in English
- King James Version (KJV)
- His flesh shall be fresher than a child’s: he shall return to the days of his youth:
- World English Bible (WEB)
- His flesh will be fresher than a child’s. He returns to the days of his youth.
- American Standard Version (ASV)
- His flesh shall be fresher than a child’s; He returneth to the days of his youth.
- Bible in Basic English (BBE)
- Then his flesh becomes young again, and he comes back to the days of his early strength;
- Darby Translation (DBY)
- His flesh shall be fresher than in childhood; he shall return to the days of his youth.
- Webster's Bible (WBS)
- His flesh shall be fresher than a child's: he will return to the days of his youth:
- Young's Literal Translation (YLT)
- Fresher [is] his flesh than a child's, He returneth to the days of his youth.
Read in context
- 23ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில்,
- 24அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில்இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.
- 25அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயதுநாட்களுக்குத் திரும்புவான்.
- 26அவன் தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.
- 27அவன் மனுஷரை நோக்கிப்பார்த்து: நான் பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை.
Cross references
- Psalm 103:5 சங்கீதம் 103:5நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.
- 2 Kings 5:14 2 இராஜாக்கள் 5:14அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.
- Joshua 14:10–11 யோசுவா 14:10–11இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.
- Deuteronomy 34:7 உபாகமம் 34:7மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.
- Job 42:16 யோபு 42:16இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
- Hosea 2:15 ஓசியா 2:15அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.