Job 33 in Tamil
யோபு 33
- 1
யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
Wherefore, Job, I pray thee, hear my speeches, and hearken to all my words.
- 2
இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.
Behold, now I have opened my mouth, my tongue hath spoken in my mouth.
- 3
என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய்வசனிக்கும்.
My words [shall be of] the uprightness of my heart: and my lips shall utter knowledge clearly.
- 4
தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.
The Spirit of God hath made me, and the breath of the Almighty hath given me life.
- 5
உம்மாலே கூடுமானால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு எதிராக நில்லும்.
If thou canst answer me, set [thy words] in order before me, stand up.
- 6
இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.
Behold, I [am] according to thy wish in God’s stead: I also am formed out of the clay.
- 7
இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது.
Behold, my terror shall not make thee afraid, neither shall my hand be heavy upon thee.
- 8
நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
Surely thou hast spoken in mine hearing, and I have heard the voice of [thy] words, [saying],
- 9
நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.
I am clean without transgression, I [am] innocent; neither [is there] iniquity in me.
- 10
இதோ, என்னில் அவர் குற்றம் பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்.
Behold, he findeth occasions against me, he counteth me for his enemy,
- 11
அவர் என் கால்களைத் தொழுவிலே மாட்டி, என் நடைகளையெல்லாம் காவல்படுத்துகிறார் என்று சொன்னீர்.
He putteth my feet in the stocks, he marketh all my paths.
- 12
இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்குப் பிரதியுத்தரமாகச் சொல்லுகிறேன்; மனுஷனைப்பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார்.
Behold, [in] this thou art not just: I will answer thee, that God is greater than man.
- 13
அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையுங்குறித்துக் காரணம் சொல்லவில்லையென்று நீர் அவரோடே என் வழக்காடுகிறீர்?
Why dost thou strive against him? for he giveth not account of any of his matters.
- 14
தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே.
For God speaketh once, yea twice, [yet man] perceiveth it not.
- 15
கனநித்திரை மனுஷர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்,
In a dream, in a vision of the night, when deep sleep falleth upon men, in slumberings upon the bed;
- 16
அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடையசெவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரை போட்டு,
Then he openeth the ears of men, and sealeth their instruction,
- 17
மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.
That he may withdraw man [from his] purpose, and hide pride from man.
- 18
இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.
He keepeth back his soul from the pit, and his life from perishing by the sword.
- 19
அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும்தண்டிக்கப்படுகிறான்.
He is chastened also with pain upon his bed, and the multitude of his bones with strong [pain:]
- 20
அவன் ஜீவன் அப்பத்தையும், அவன் ஆத்துமா ருசிகரமான போஜனத்தையும் அரோசிக்கும்.
So that his life abhorreth bread, and his soul dainty meat.
- 21
அவன் மாம்சம் காணப்படாதபடிக்கு அழிந்து, மூடப்பட்டிருந்த அவன் எலும்புகள் வெளிப்படுகிறது.
His flesh is consumed away, that it cannot be seen; and his bones [that] were not seen stick out.
- 22
அவன் ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது.
Yea, his soul draweth near unto the grave, and his life to the destroyers.
- 23
ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில்,
If there be a messenger with him, an interpreter, one among a thousand, to shew unto man his uprightness:
- 24
அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில்இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.
Then he is gracious unto him, and saith, Deliver him from going down to the pit: I have found a ransom.
- 25
அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயதுநாட்களுக்குத் திரும்புவான்.
His flesh shall be fresher than a child’s: he shall return to the days of his youth:
- 26
அவன் தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.
He shall pray unto God, and he will be favourable unto him: and he shall see his face with joy: for he will render unto man his righteousness.
- 27
அவன் மனுஷரை நோக்கிப்பார்த்து: நான் பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை.
He looketh upon men, and [if any] say, I have sinned, and perverted [that which was] right, and it profited me not;
- 28
என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.
He will deliver his soul from going into the pit, and his life shall see the light.
- 29
இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பிக்கிறதற்கும்,
Lo, all these [things] worketh God oftentimes with man,
- 30
அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.
To bring back his soul from the pit, to be enlightened with the light of the living.
- 31
யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
Mark well, O Job, hearken unto me: hold thy peace, and I will speak.
- 32
சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால், எனக்கு மறுஉத்தரவு கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு.
If thou hast any thing to say, answer me: speak, for I desire to justify thee.
- 33
ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான்.
If not, hearken unto me: hold thy peace, and I shall teach thee wisdom.