John 7:42 in Tamil
தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.
Thaaveethin santhathiyilum, thaaveethu iruntha pethlagaem oorilumirunthu kiristhu varuvaar endru vaethavaakkiyam sollavillaiyaa endraarkal.
John 7:42 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- கிறிஸ்து தாவீதின் குடும்பத்திலிருந்தும், தாவீது வாழ்ந்த பெத்லகேம் பட்டணத்தில் இருந்து வருவார் என்று வேதவசனம் சொல்லுகிறது அல்லவா?” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- வேதவாக்கியங்கள், தாவீதின் குடும்பத்திலிருந்து தான் கிறிஸ்து வரப்போகிறார் என்று கூறுகின்றன. அத்துடன் தாவீது வாழ்ந்த பெத்லகேமிலிருந்துதான் கிறிஸ்து வருவார் என்றும் கூறுகின்றன” என்றனர்.
John 7:42 in English
- King James Version (KJV)
- Hath not the scripture said, That Christ cometh of the seed of David, and out of the town of Bethlehem, where David was?
- World English Bible (WEB)
- Hasn’t the Scripture said that the Christ comes of the offspring of David, and from Bethlehem, the village where David was?”
- American Standard Version (ASV)
- Hath not the scripture said that the Christ cometh of the seed of David, and from Bethlehem, the village where David was?
- Bible in Basic English (BBE)
- Do not the Writings say that the Christ comes of the seed of David and from Beth-lehem, the little town where David was?
- Darby Translation (DBY)
- Has not the scripture said that the Christ comes of the seed of David, and from the village of Bethlehem, where David was?
- Webster's Bible (WBS)
- Hath not the scripture said, That Christ cometh from the seed of David, and out of the town of Bethlehem, where David was?
- Young's Literal Translation (YLT)
- Did not the Writing say, that out of the seed of David, and from Bethlehem — the village where David was — the Christ doth come?'
Read in context
- 40ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
- 41வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?
- 42தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.
- 43இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று.
- 44அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
Cross references
- Micah 5:2 மீகா 5:2எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது.
- Matthew 2:5 மத்தேயு 2:5அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:
- Jeremiah 23:5 எரேமியா 23:5இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
- Luke 2:4 லூக்கா 2:4அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியானமரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
- Matthew 1:1 மத்தேயு 1:1ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
- Isaiah 11:1 ஏசாயா 11:1ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
- Luke 2:11 லூக்கா 2:11இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
- 1 Samuel 16:1 1 சாமுவேல் 16:1கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பைத் தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன். அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.
- Psalm 132:11 சங்கீதம் 132:11உன் கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தின்மேல் வைப்பேன்என்றும்,
- 1 Samuel 16:18 1 சாமுவேல் 16:18அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன், கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்.
- Psalm 89:4 சங்கீதம் 89:4என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா.)
- 1 Samuel 16:11–13 1 சாமுவேல் 16:11–13உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயைநோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான். ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்தமேனியும், அழகிய கண்களும் நல்ல ரூபமுமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர்: இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார். அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.
Original words (Greek)
- Hath · G2036ἔπω épō
- not · G3780οὐχί ouchí
- scripture · G1124γραφή graphḗ
- said · G2036ἔπω épō
- That · G3754ὅτι hóti
- Christ · G5547Χριστός Christós
- cometh · G2064ἔρχομαι érchomai
- of · G1537ἐκ ek
- seed · G4690σπέρμα spérma
- David · G1138Δαβίδ Dabíd
- and · G2532καί kaí
- out · G575ἀπό apó
- town · G2968κώμη kṓmē
- Bethlehem · G965Βηθλεέμ Bēthleém
- where · G3699ὅπου hópou
- David · G1138Δαβίδ Dabíd
- was · G2258ἦν ēn
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.