Lamentations 2:19 in Tamil
எழுந்திரு, இராத்திரியிலே முதற் சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
Ezhunthiru, iraaththiriyilae muthar saamaththil kooppidu; aandavarin samugaththil un iruthayaththaith thanneeraippola ootrividu; ellaath therukkalin munaiyilum pasiyinaal moorchiththuppogira un kuzhanthaigalin piraananukkaaga un kaigalai avaridaththirku aeredu.
Lamentations 2:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எழுந்திரு, இரவிலே முதல் ஜாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மயங்கியிருக்கிற உன் குழந்தைகளின் உயிருக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
- Open Tamil Contemporary Version
- எழும்பு, இரவிலே முதற்சாமத்தில் கதறி அழு, யெகோவாவினுடைய சமுகத்தில் உன் இருயத்தைத் தண்ணீரைப்போல் ஊற்று. ஒவ்வொரு தெருவின் முனையிலும், பசியினால் மயங்கி விழும் உனது பிள்ளைகளின் உயிருக்காக அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து.
- Tamil Easy Reading Version
- எழுந்திரு! இரவில் கதறு! இரவின் முதற் சாமத்தில் கதறு! உனது இதயத்தைத் தண்ணீரைப்போன்று ஊற்று! கர்த்தருக்கு முன்னால் உன் இதயத்தை ஊற்று! கர்த்தரிடம் ஜெபம் செய்வதற்கு உன் கைகளை மேலே தூக்கு. உன் குழந்தைகளை வாழவிடும்படி அவரிடம் கேள். பசியினால் மயங்கிக்கொண்டிருந்த உனது பிள்ளைகள் வாழும்படி நீ அவரிடம் கேள். நகரத்தின் எல்லா தெருக்களிலும் அவர்கள் பசியால் மயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
Lamentations 2:19 in English
- King James Version (KJV)
- Arise, cry out in the night: in the beginning of the watches pour out thine heart like water before the face of the Lord: lift up thy hands toward him for the life of thy young children, that faint for hunger in the top of every street.
- World English Bible (WEB)
- Arise, cry out in the night, at the beginning of the watches! Pour out your heart like water before the face of the Lord. Lift up your hands toward him for the life of your young children, who faint for hunger at the head of every street.
- American Standard Version (ASV)
- Arise, cry out in the night, at the beginning of the watches; Pour out thy heart like water before the face of the Lord: Lift up thy hands toward him for the life of thy young children, that faint for hunger at the head of every street.
- Bible in Basic English (BBE)
- Up! give cries in the night, at the starting of the night-watches; let your heart be flowing out like water before the face of the Lord, lifting up your hands to him for the life of your young children who are falling down, feeble for need of food, at the top of every street.
- Darby Translation (DBY)
- Arise, cry out in the night, in the beginning of the watches; pour out thy heart like water before the face of the Lord: lift up thy hands toward him for the life of thy young children, who faint from hunger at the top of all the streets.
- Webster's Bible (WBS)
- Arise, cry out in the night: in the beginning of the watches pour out thy heart like water before the face of the LORD: lift up thy hands towards him for the life of thy young children, that faint for hunger at the head of every street.
- Young's Literal Translation (YLT)
- Arise, cry aloud in the night, At the beginning of the watches. Pour out as water thy heart, Over against the face of the Lord, Lift up unto Him thy hands, for the soul of thine infants, Who are feeble with hunger at the head of all out-places.
Read in context
- 17கர்த்தர் தாம் நினைத்ததைச் செய்தார்; பூர்வநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைஞன் சந்தோஷிக்கும்படி செய்தார்; உன் சத்துருக்களின் கொம்பை உயர்த்தினார்.
- 18அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது: சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்கவொட்டாதே.
- 19எழுந்திரு, இராத்திரியிலே முதற் சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
- 20கர்த்தாவே, யாருக்கு இந்தப்பிரகாரமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவேண்டுமோ? ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ?
- 21இளைஞனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் பட்டயத்தால் விழுந்தார்கள்; உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர்.
Cross references
- Psalm 62:8 சங்கீதம் 62:8ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.)
- Psalm 119:147–148 சங்கீதம் 119:147–148அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்குமுன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.
- Isaiah 26:9 ஏசாயா 26:9என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.
- Psalm 142:2 சங்கீதம் 142:2அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
- Mark 1:35 மாற்கு 1:35அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
- 1 Samuel 1:15 1 சாமுவேல் 1:15அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும்குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
- Lamentations 2:11–12 புலம்பல் 2:11–12என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள். அவர்கள் குத்துண்டவர்களைப்போல நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கும்போதும், தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் பிராணனை விடும் போதும், தங்கள் தாய்களை நோக்கி: தானியமும் திராட்சரசமும் எங்கே என்கிறார்கள்.
- Psalm 141:2 சங்கீதம் 141:2என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.
- Luke 6:12 லூக்கா 6:12அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
- Judges 7:19 நியாயாதிபதிகள் 7:19நடுஜாமத்தின் துவக்கத்தில், ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்தஜாமத்தின் துவக்கத்திலே பாளயத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.
- Psalm 42:8 சங்கீதம் 42:8ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்.
- Matthew 14:25 மத்தேயு 14:25இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
Original words (Hebrew)
- Arise · H6965קוּם qûwm
- out · H7442רָנַן rânan
- night · H3915לַיִל layil
- beginning · H7218רֹאשׁ rôʼsh
- watches · H821אַשְׁמֻרָה ʼashmurâh
- out · H8210שָׁפַךְ shâphak
- heart · H3820לֵב lêb
- water · H4325מַיִם mayim
- before · H5227נֹכַח nôkach
- face · H6440פָּנִים pânîym
- Lord · H136אֲדֹנָי ʼĂdônây
- up · H5375נָשָׂא nâsâʼ
- hands · H3709כַּף kaph
- life · H5315נֶפֶשׁ nephesh
- children · H5768עוֹלֵל ʻôwlêl
- faint · H5848עָטַף ʻâṭaph
- hunger · H7458רָעָב râʻâb
- top · H7218רֹאשׁ rôʼsh
- street · H2351חוּץ chûwts
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.