Proverbs 21:24 in Tamil
அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.
Agangaaramum idumbumullavanukkup pariyaasakkaaranendru peyar, avan aganthaiyaana sinaththodae nadakkiraan.
Proverbs 21:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர், அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான்.
- Open Tamil Contemporary Version
- அகந்தையும் இறுமாப்பும் உள்ளவர்களுக்கு, “ஏளனக்காரர்கள்” என்று பெயர், அவர்கள் எல்லையற்ற ஆணவத்துடன் நடந்துகொள்கிறார்கள்.
- Tamil Easy Reading Version
- பெருமைகொண்டவன் மற்றவர்களைவிடத் தன்னைச் சிறந்தவனாக நினைக்கிறான். அவன் தனது செயல்கள் மூலம் தீயவன் என்று காட்டுகிறான்.
Proverbs 21:24 in English
- King James Version (KJV)
- Proud [and] haughty scorner [is] his name, who dealeth in proud wrath.
- World English Bible (WEB)
- The proud and arrogant man—“Scoffer” is his name— he works in the arrogance of pride.
- American Standard Version (ASV)
- The proud and haughty man, scoffer is his name; He worketh in the arrogance of pride.
- Bible in Basic English (BBE)
- The man of pride, lifted up in soul, is named high-hearted; he is acting in an outburst of pride.
- Darby Translation (DBY)
- Proud, arrogant, scorner is his name who dealeth in proud wrath.
- Webster's Bible (WBS)
- Proud [and] haughty scorner [is] his name, who dealeth in proud wrath.
- Young's Literal Translation (YLT)
- Proud, haughty, scorner [is] his name, Who is working in the wrath of pride.
Read in context
- 22பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான்.
- 23தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
- 24அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.
- 25சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.
- 26அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான்.
Cross references
- Psalm 1:1 சங்கீதம் 1:1துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
- Ecclesiastes 7:8–9 பிரசங்கி 7:8–9ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.
- Matthew 2:16 மத்தேயு 2:16அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
- Proverbs 18:12 நீதிமொழிகள் 18:12அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
- Proverbs 1:22 நீதிமொழிகள் 1:22பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
- Proverbs 19:29 நீதிமொழிகள் 19:29பரியாசக்காரருக்குத் தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.
- Proverbs 16:18 நீதிமொழிகள் 16:18அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
- Isaiah 16:6 ஏசாயா 16:6மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மெத்தப் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.
- Jeremiah 48:29 எரேமியா 48:29அவன் மெத்தப் பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் பெத்தரிக்கத்தையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்.
- Esther 3:5–6 எஸ்தர் 3:5–6ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான். ஆனாலும் மொர்தெகாயின்மேல்மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக்காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.
- Proverbs 6:17 நீதிமொழிகள் 6:17அவையாவன: மேட்டிமையானகண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.