Psalm 104:23 in Tamil
அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்.
Appozhuthu manushan saayangaalamattum than vaelaikkum, than pannaikkum purappadugiraan.
Psalm 104:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது மனிதன் மாலைவரை தன்னுடைய வேலைக்கும், தன்னுடைய உழைப்புக்கும் புறப்படுகிறான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது மனிதன் தன் வேலைக்குப் போகிறான்; மாலையாகும்வரை தன் தொழிலில் ஈடுபடுகின்றான்.
- Tamil Easy Reading Version
- அப்போது ஜனங்கள் தங்கள் வேலைகளுக்காகச் செல்வார்கள், அவர்கள் மாலைவரை பணிபுரிவார்கள்.
Psalm 104:23 in English
- King James Version (KJV)
- Man goeth forth unto his work and to his labour until the evening.
- World English Bible (WEB)
- Man goes out to his work, to his labor until the evening.
- American Standard Version (ASV)
- Man goeth forth unto his work And to his labor until the evening.
- Bible in Basic English (BBE)
- Man goes out to his work, and to his business, till the evening.
- Darby Translation (DBY)
- Man goeth forth unto his work, and to his labour until the evening.
- Webster's Bible (WBS)
- Man goeth forth to his work and to his labor until the evening.
- Young's Literal Translation (YLT)
- Man goeth forth to his work, And to his service — till evening.
Read in context
- 21பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித் தேடும்.
- 22சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும்.
- 23அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்.
- 24கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால்நிறைந்திருக்கிறது.
- 25பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும்சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.
Cross references
- Genesis 3:19 ஆதியாகமம் 3:19நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
- Ecclesiastes 5:12 பிரசங்கி 5:12வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப்புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவெட்டாது.
- Ephesians 4:28 எபேசியர் 4:28திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத் தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
- Judges 19:16 நியாயாதிபதிகள் 19:16வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான்; அந்த மனுஷனும் எப்பிராயீம் மலைத்தேசத்தான், அவன் கிபியாவிலே சஞ்சரிக்கவந்தான்; அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர்.
- 2 Thessalonians 3:8–12 2 தெசலோனிக்கேயர் 3:8–12ஒருவனிடத்திலும் இலவசமாய்ச்சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச்செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம். ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.