Psalm 107:42 in Tamil
உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.
Uththamarkal athaikkandu magizhuvaarkal; niyaayakkaedellaam than vaayai moodum.
Psalm 107:42 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும்.
- Open Tamil Contemporary Version
- நீதிமான்கள் அதைக்கண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் கொடியவர்கள் அனைவரும் வாயடைத்துப் போய்விடுவார்கள்.
- Tamil Easy Reading Version
- நல்ல ஜனங்கள் இதைக்கண்டு மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் தீய ஜனங்களோ இதைக் காணும்போது, என்ன சொல்வதென்று அறியார்கள்.
Psalm 107:42 in English
- King James Version (KJV)
- The righteous shall see [it], and rejoice: and all iniquity shall stop her mouth.
- World English Bible (WEB)
- The upright will see it, and be glad. All the wicked will shut their mouths.
- American Standard Version (ASV)
- The upright shall see it, and be glad; And all iniquity shall stop her mouth.
- Bible in Basic English (BBE)
- The upright see it and are glad: the mouth of the sinner is stopped.
- Darby Translation (DBY)
- The upright shall see it, and rejoice; and all unrighteousness shall stop its mouth.
- Webster's Bible (WBS)
- The righteous shall see [it] , and rejoice: and all iniquity shall stop her mouth.
- Young's Literal Translation (YLT)
- The upright do see and rejoice, And all perversity hath shut her mouth.
Read in context
- 40அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி, வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
- 41எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
- 42உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.
- 43எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள். (தாவீதின் சங்கீதமாகிய பாட்டு.)
Cross references
- Job 22:19 யோபு 22:19எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல், அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
- Psalm 63:11 சங்கீதம் 63:11ராஜாவோ தேவனில் களிகூருவார்; அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின்சங்கீதம்.)
- Romans 3:19 ரோமர் 3:19மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
- Psalm 52:6 சங்கீதம் 52:6நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து:
- Job 5:15–16 யோபு 5:15–16ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார். அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.
- Psalm 112:10 சங்கீதம் 112:10துன்மார்க்கன் அதைக் கண்டுமனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.
- Isaiah 66:10–11 ஏசாயா 66:10–11எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள்நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடே கூட மிகவும் மகிழுங்கள். நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்;
- Psalm 58:10–11 சங்கீதம் 58:10–11பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான். அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான். (சவுல் தாவீதைக் கொல்லுதற்காக ஏவலாட்களை அனுப்பினபோது அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கத் அவன் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் சங்கீதம்.)
- Exodus 11:7 யாத்திராகமம் 11:7ஆனாலும் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை.
- Isaiah 66:14 ஏசாயா 66:14நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்.
- Proverbs 10:11 நீதிமொழிகள் 10:11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.