Psalm 16 in Tamil
சங்கீதம் 16
- 1
தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
Michtam of David. Preserve me, O God: for in thee do I put my trust.
- 2
என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்குவேண்டியதாயிராமல்;
[O my soul], thou hast said unto the LORD, Thou [art] my Lord: my goodness [extendeth] not to thee;
- 3
பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.
[But] to the saints that [are] in the earth, and [to] the excellent, in whom [is] all my delight.
- 4
அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்தபானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.
Their sorrows shall be multiplied [that] hasten [after] another [god:] their drink offerings of blood will I not offer, nor take up their names into my lips.
- 5
கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.
The LORD [is] the portion of mine inheritance and of my cup: thou maintainest my lot.
- 6
நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.
The lines are fallen unto me in pleasant [places;] yea, I have a goodly heritage.
- 7
எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.
I will bless the LORD, who hath given me counsel: my reins also instruct me in the night seasons.
- 8
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
I have set the LORD always before me: because [he is] at my right hand, I shall not be moved.
- 9
ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.
Therefore my heart is glad, and my glory rejoiceth: my flesh also shall rest in hope.
- 10
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.
For thou wilt not leave my soul in hell; neither wilt thou suffer thine Holy One to see corruption.
- 11
ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு. (தாவீதின் விண்ணப்பம்.)
Thou wilt shew me the path of life: in thy presence [is] fulness of joy; at thy right hand [there are] pleasures for evermore.