Psalm 59:12 in Tamil
அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.
Avarkal uthadugalin paechu avarkal vaayin paavamaayirukkirathu; avarkal itta saabamum solliya poyyum aagiya ivaigalinimiththam thangal perumaiyil agappaduvaarkalaaga.
Psalm 59:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால் தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக.
- Open Tamil Contemporary Version
- அவர்களுடைய உதடுகளின் பேச்சு, அவர்களுடைய வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் சொல்லும் சாபமும் பொய்யும், அவர்களை பெருமையில் சிக்கவைப்பதாக.
- Tamil Easy Reading Version
- அத்தீயோர் சபித்துப் பொய்க் கூறுவர். அவர்கள் கூறியவற்றிற்காக அவர்களைத் தண்டியும். அவர்கள் அகந்தையே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்.
Psalm 59:12 in English
- King James Version (KJV)
- [For] the sin of their mouth [and] the words of their lips let them even be taken in their pride: and for cursing and lying [which] they speak.
- World English Bible (WEB)
- For the sin of their mouth, and the words of their lips, let them be caught in their pride, for the curses and lies which they utter.
- American Standard Version (ASV)
- [For] the sin of their mouth, [and] the words of their lips, Let them even be taken in their pride, And for cursing and lying which they speak.
- Bible in Basic English (BBE)
- Because of the sin of their mouths and the word of their lips, let them even be taken in their pride; and for their curses and their deceit,
- Darby Translation (DBY)
- [Because of] the sin of their mouth, the word of their lips, let them even be taken in their pride; and because of cursing and lying which they speak.
- Webster's Bible (WBS)
- [For] the sin of their mouth [and] the words of their lips let them even be taken in their pride: and for cursing and lying [which] they speak.
- Young's Literal Translation (YLT)
- The sin of their mouth [is] a word of their lips, And they are captured in their pride, And from the curse and lying they recount.
Read in context
- 10என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்குவரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
- 11அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே; எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.
- 12அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.
- 13தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும்; இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கும். (சேலா.)
- 14அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
Cross references
- Proverbs 12:13 நீதிமொழிகள் 12:13துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோநெருக்கத்தினின்று நீங்குவான்.
- Psalm 10:7 சங்கீதம் 10:7அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
- Hosea 4:2 ஓசியா 4:2பொய்யாணையிட்டு, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்பண்ணி, மிஞ்சி மிஞ்சிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது.
- Proverbs 18:7 நீதிமொழிகள் 18:7மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.
- Matthew 12:36–37 மத்தேயு 12:36–37மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்.
- Psalm 120:3–4 சங்கீதம் 120:3–4கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்? பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
- Psalm 10:2 சங்கீதம் 10:2துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த்துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
- Psalm 109:17–18 சங்கீதம் 109:17–18சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம். சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
- Matthew 27:25 மத்தேயு 27:25அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
- Matthew 27:63 மத்தேயு 27:63ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்றுநாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.
- Zephaniah 3:11 செப்பனியா 3:11எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும் அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக்களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய்.
- Proverbs 11:6 நீதிமொழிகள் 11:6செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.