Psalm 72:8 in Tamil
ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.
Oru samuththiranthodangi marusamuththiramvaraikkum, nathithodangi poomiyin ellaigalvaraikkum avar arasaaluvaar.
Psalm 72:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.
- Open Tamil Contemporary Version
- ஒரு கடலில் இருந்து மறுகடல் வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அரசர் ஆளுகை செய்யட்டும்.
- Tamil Easy Reading Version
- ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும், கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும்.
Psalm 72:8 in English
- King James Version (KJV)
- He shall have dominion also from sea to sea, and from the river unto the ends of the earth.
- World English Bible (WEB)
- He shall have dominion also from sea to sea, from the River to the ends of the earth.
- American Standard Version (ASV)
- He shall have dominion also from sea to sea, And from the River unto the ends of the earth.
- Bible in Basic English (BBE)
- Let his kingdom be from sea to sea, from the River to the ends of the earth.
- Darby Translation (DBY)
- And he shall have dominion from sea to sea, and from the river unto the ends of the earth.
- Webster's Bible (WBS)
- He shall have dominion also from sea to sea, and from the river to the ends of the earth.
- Young's Literal Translation (YLT)
- And he ruleth from sea unto sea, And from the river unto the ends of earth.
Read in context
- 6புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.
- 7அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.
- 8ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.
- 9வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள்.
- 10தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
Cross references
- Exodus 23:31 யாத்திராகமம் 23:31சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.
- Zechariah 9:10 சகரியா 9:10எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்.
- 1 Kings 4:21–24 1 இராஜாக்கள் 4:21–24நதிதொடங்கி, பெலிஸ்தர் தேசவழியாய் எகிப்தின் எல்லைமட்டும் இருக்கிற சகல ராஜ்யங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனைச் சேவித்தார்கள். நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும், கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுக்கப்பட்டபத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாம். நதிக்கு இப்புறத்தில் இருக்கிற திப்சாமுதற்கொண்டு ஆசாமட்டுமுள்ளவையெல்லாவற்றையும், நதிக்கு இப்புறத்திலுள்ள சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாயிருந்தது.
- Psalm 80:11 சங்கீதம் 80:11அது தன் கொடிகளைச் சமுத்திர மட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது.
- Psalm 2:8 சங்கீதம் 2:8என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
- Psalm 89:25 சங்கீதம் 89:25அவன் கையைச் சமுத்திரத்தின் மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள் மேலும் ஆளும்படி வைப்பேன்.
- Psalm 89:36 சங்கீதம் 89:36அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
- Revelation 11:15 வெளிப்படுத்தின விசேஷம் 11:15ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடையகிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
- Psalm 22:27–28 சங்கீதம் 22:27–28பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.