Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 75 in Tamil

Present
  1. 1

    உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.

    To the chief Musician, Al-taschith, A Psalm [or] Song of Asaph. Unto thee, O God, do we give thanks, [unto thee] do we give thanks: for [that] thy name is near thy wondrous works declare.

  2. 2

    நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன்.

    When I shall receive the congregation I will judge uprightly.

  3. 3

    பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா.)

    The earth and all the inhabitants thereof are dissolved: I bear up the pillars of it. Selah.

  4. 4

    வீம்புக்காரரை நோக்கி, வீம்புபேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.

    I said unto the fools, Deal not foolishly: and to the wicked, Lift not up the horn:

  5. 5

    உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ளகழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.

    Lift not up your horn on high: speak [not with] a stiff neck.

  6. 6

    கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.

    For promotion [cometh] neither from the east, nor from the west, nor from the south.

  7. 7

    தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.

    But God [is] the judge: he putteth down one, and setteth up another.

  8. 8

    கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.

    For in the hand of the LORD [there is] a cup, and the wine is red; it is full of mixture; and he poureth out of the same: but the dregs thereof, all the wicked of the earth shall wring [them] out, [and] drink [them].

  9. 9

    நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

    But I will declare for ever; I will sing praises to the God of Jacob.

  10. 10

    துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும். (நெகினோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதமாகிய பாட்டு.)

    All the horns of the wicked also will I cut off; [but] the horns of the righteous shall be exalted.

All chapters of Psalms · Tamil Bible

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

King James Version: public domain.