Psalm 74 in Tamil
சங்கீதம் 74
- 1
தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?
Maschil of Asaph. O God, why hast thou cast [us] off for ever? [why] doth thine anger smoke against the sheep of thy pasture?
- 2
நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்தசீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும்.
Remember thy congregation, [which] thou hast purchased of old; the rod of thine inheritance, [which] thou hast redeemed; this mount Zion, wherein thou hast dwelt.
- 3
நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும்; பரிசுத்த ஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான்.
Lift up thy feet unto the perpetual desolations; [even] all [that] the enemy hath done wickedly in the sanctuary.
- 4
உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்.
Thine enemies roar in the midst of thy congregations; they set up their ensigns [for] signs.
- 5
கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான்.
[A man] was famous according as he had lifted up axes upon the thick trees.
- 6
இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் வாச்சிகளாலும் சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள்.
But now they break down the carved work thereof at once with axes and hammers.
- 7
உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, உமது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள்.
They have cast fire into thy sanctuary, they have defiled [by casting down] the dwelling place of thy name to the ground.
- 8
அவர்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள்.
They said in their hearts, Let us destroy them together: they have burned up all the synagogues of God in the land.
- 9
எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.
We see not our signs: [there is] no more any prophet: neither [is there] among us any that knoweth how long.
- 10
தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?
O God, how long shall the adversary reproach? shall the enemy blaspheme thy name for ever?
- 11
உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும்.
Why withdrawest thou thy hand, even thy right hand? pluck [it] out of thy bosom.
- 12
பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.
For God [is] my King of old, working salvation in the midst of the earth.
- 13
தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர்.
Thou didst divide the sea by thy strength: thou brakest the heads of the dragons in the waters.
- 14
தேவரீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்துஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.
Thou brakest the heads of leviathan in pieces, [and] gavest him [to be] meat to the people inhabiting the wilderness.
- 15
ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர்.
Thou didst cleave the fountain and the flood: thou driedst up mighty rivers.
- 16
பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.
The day [is] thine, the night also [is] thine: thou hast prepared the light and the sun.
- 17
பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டப்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர்.
Thou hast set all the borders of the earth: thou hast made summer and winter.
- 18
கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.
Remember this, [that] the enemy hath reproached, O LORD, and [that] the foolish people have blasphemed thy name.
- 19
உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும்.
O deliver not the soul of thy turtledove unto the multitude [of the wicked:] forget not the congregation of thy poor for ever.
- 20
உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே.
Have respect unto the covenant: for the dark places of the earth are full of the habitations of cruelty.
- 21
துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும்; சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்.
O let not the oppressed return ashamed: let the poor and needy praise thy name.
- 22
தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.
Arise, O God, plead thine own cause: remember how the foolish man reproacheth thee daily.
- 23
உம்முடைய சத்துருக்களின் ஆரவாரத்தை மறவாதேயும்; உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் அமளி எப்பொழுதும் அதிகரிக்கிறது. (அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதமாகிய பாட்டு)
Forget not the voice of thine enemies: the tumult of those that rise up against thee increaseth continually.